Books
Arunagirichelvar

Kandhar Anubhudhi

Song 47 - ARARaiyum neeththu (ஆறாறையும் நீத்து)

~ 1 min read

Tamil Lyrics

ஆறா றையுநீத் ததன்மேல் நிலையைப்
பேறா அடியேன் பெறுமா றுளதோ
சீறா வருசூர் சிதைவித் திமையோர்
கூறா வுலகங் குளிர்வித் தவனே!

Tamil Lyrics (Split)

ஆறு ஆறையும் நீத்து அதன்மேல் நிலையைப்
பேறா அடியேன், பெறுமாறு உளதோ?
சீறா வருசூர் சிதைவித்து, இமையோர்
கூறா உலகம், குளிர்வித்தவனே!

Tamil Meaning

சீற்றங்கொண்டு வந்த சூரபன்மனை அழித்து, விண்ணோர் இன்புறுமாறு அவர்களின் பொன்னுலகைக் குளிர்வித்தவரே! [24 ஆன்ம தத்துவம், 7 வித்யா தத்துவம், 5 சிவ தத்துவம் ஆகிய] முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து அவற்றிற்கு அப்பால் உள்ள நிலையை எய்தும் நற்பேற்றினை அடியேன் பெறும் வாய்ப்பு உண்டோ?

English Lyrics

ARARaiyum neeththu adhanmEl nilaiyaip
pERa adiyEn peRumARu uLadhO
seeRa varisUr sidhaiviththu imaiyOr
kURA ulagam kuLirviththavanE!

English Meaning

O, Lord Thirumurugapperumaan! You destroyed the angry demon Soorapanman, and made the celestials' golden world a cooler habitat for them! Is there any likelihood that I would attain the stage beyond the thirty-six levels of spiritual philosophical systems [namely, 24 systems concerning soul, seven systems concerning knowledge, and five systems concerning Sivam]?

· WhatsApp
Books

Kandhar Anubhudhi

by Dr. Singaravelu Sachithanantham

92%
Reading Progress
Local First