சித்து வகுப்பு
முன்னுரை
பல சித்திகள் பெறும் வழியைக் கூறி முருகன் திருப்புகழைக் கற்றவரே சித்தருக்குள் மேலான சித்தரென்றது. அருணகிரியார் காலத்தில் ரசவாதத்தில் (உலோகங்களைப் பொன்னாக்க விரும்புதலில்) மக்களுக்குப் பேராசை மிகுந்திருந்தது போலும். பயனற்ற அவ்வாசையை அறவே ஒழிக்கவும், உண்மைப் பெருநிலையைத் தருதற்கு உற்ற வழி முருகன் திருப்புகழைக் கற்பதே என உலகினருக்குக் கற்பிக்கவும், எழுந்த உபதேச வகுப்பு இது.
சித்து வகுப்பு (மூலம்)
அடல்பு னைந்த வேலு மயிலும் என்றும் வாழி
அரிய தொன்று கூற அருகி ருந்து கேண்மின்
அளவில் பலகாய மோடாடி யண்டர்
அறிய விளையாட வர்முலி ஒன்றில்
ஆசை வேறிலை அறுமுக வன்திரு
ஆணை மேருவை அடிதலை கண்டனம்
அகில லோகமும் அடைவடை வேமுதல்
அருளி னோம்அது சிவனறி யாதல
அமையும் எனும்படி நின்ற மநோரதம்
அவைமுழு துந்தரு வம்பத றாதுகொள்
ஆதியு முடிவுமி லாநந் தந்தரும்
ஆறிரு கரதல நாதன் தந்தவை
(பச்சிலை மூலிகைகள், மருந்து வகைகள்).
அவுஷதம் உளசில கிலுகி லுப்பைகள்
அரசிலை நறுவிலி கரிய கக்கரி
அத்தி செம்பி ராகை முட்காவளை
துத்தி சங்கம் ஓரி தழ்த்தாமரை
அவுரி கற்றாழை யொடுவைகு றிஞ்சிலி
சிவிறி கத்தாரி பொடுதலை சண்பகம்
ஆரைகொடு வேலி வேல்காஞ்சிரம்
வீரையிரு வேலி பேரீ ந்திலை
அமுக்குர வெருக்கிலை முருக்கிதழ் செருப்படை
அகத்தி தமரத்தை மதமத்தமொடு பித்திகை
ஆலம் ஆத்தி கடுக்கை கொடிக்கழல்
கோலி தேட்கடை நெய்க்கொடை வக்கணை
அகில்ப ரம்பை காரை துடரி தும்பை சூரை
அலரி சம்பு நாவல் மருது சிந்து வாரம்
அறுகு தழுதாழை மாபாலை புன்கு
புரசு பழுபாகல் பூலா அழிஞ்சில்
ஆயி லாவிரை இறலி இரும்பிலி
ஆடி ஆவணி புடமிட என்றழை
அவனி பாடல மனல மகீ ருகம்
இவைச மூலமும் எழுபது சாலடை
அதிம துரந்தக ரஞ்சிறு பாலடை
பதிமுக வெந்தய மின்கய மோதகம்
ஆறிடை அபினிரி தாரங் கந்தகம்
நூறிடை திரிபலை யோரொன் றெண்பலம்
அதிவிட யமுமொழி கிருமி சத்ருவும்
அனல்முறு கலுமற முறுகு துத்தமும்
அற்பம் ஒன்று கீரை வித்தேழிடை
யத்தில் ஒன்று பாதி தக்கோலமும்
அடவி கச்சோல நிமிளை நறும்பிசின்
அரிதம் வெட்பாலை அரிசி கருங்கணி
ஆமலகம் ஏலம் நான்மூன்றிடை
சேமசிால கூட லோகாஞ்சனம்
அரப்பொடி கடிப்பகை விடத்திர ணமப்பிர
கசத்தைசத குப்பிவிதை கொத்தமலி திப்பிலி
ஆலி கோட்டம் எலிப்பகை சச்சிலை
நீலி காய்ச்சு நிலப்பனை கற்பிசின்
மடல்சி வந்த தாழை மணவ சம்பு நீலம்
வருகு ரும்பை கோடல் துருசு சம்பி ராணி
மரிசி வசவாசி காகீச மஞ்சள்
மகிழ விதைமேதை மாமேதை குன்றி
வாரி வாய்நுரை சயில சலம்புரி
பூரி வாதுமை சணவுபெ ருங்குமிழ்
வடுவில் சீரக பலமயி ரோசனை
கடுகு ரோகணி சிவதைம னோசிலை
வகைவகை கொண்டொரு மண்டல மோரொடு
குகையினில் எண்பது செம்பினில் ஊறவை
வாதநல் வழிகள் அநேகம் பண்டையில்
வாகடம் அலகுரு நாதன் தந்தது
வழிபடும் அரியர பிரம ருட்பட
மொழிகிற வகையிது சிறிது பெற்றிலர்
மற்றும் இந்த்ர சாலம் உச்சாடனம்
முற்று மிங்ங னேத ரத்தாழ்விலை
மதலை யர்க்கீது மொழிவது பண்பல
கதவி னிற்றாழை யிடுபயம் ஒன்றிலை
வாலுழுவை யோரி காராம்பசு
வாலின்மயிர் கீரி தேவாங்கழை
மரித்தவர் சனித்தகுழி உப்புறு சலத்தினை
வடித்தினி தெடுத்தொரு குடத்தினில் நிறைத்துவை
மாறில் தோத்திர வித்தை பலித்திடின்
மாடை சேர்க்க வருத்தம் உனக்கிலை
ரசவாதி கேட்பன
மணம தின்று நாளை எனமொ ழிந்து கேளு
மனைகள் எங்கும் ஓடி இனிவி ரைந்து தேடு
வளையல் குழைபீலி காலாழி தண்டை
மணிவ யிரவீடு மேலீடு செம்பொன்
வாளி பாடக மணிபிறை சங்கிலி
பாளை சூடக மயிலம் இலம்பகம்
மவுலி நூபுர மயில்திரு வாசிகை
சவடி தோள்வளை முகவளை மேல்வளை
மரகத குண்டலம் வெண்டய மேகலை
அரசிலை கம்பி குறுங்குணி சாலகம்
வாரணி யுடைமணி ஆரங் கிங்கிணி
வாகுவ லயநெளி பீடங் கண்டிகை
மணிமக ரிகைவளை திகிரி பட்டிகை
பணிகளில் அழகிய பணிகள் கொக்கிகள்
வட்ட அம்பொ னோலை முத்தாவளி
சுட்டி சந்து காறை கைக் காறைகள்
வடக முத்தோலை அரைவட முஞ்செறி
கடகம் வித்தார மகர நெடுங்குழை
மாதரணி தாலி நூல்காஞ்சனம்
மாலிகை மதாணி பீ தாம்பரம்
மதிப்பரிய கைச்சரி சரப்பணி யிலைச்சினை
பதக்கம் இவையுட்பட அணிப்படலம் இட்டுவை
மாடை பாட்டிபு தைத்த குடப்பண
மோடு கூட்டியு ருக்கவி ருப்புடன்
இடுப்ர சங்கி யாமல் உலை அ நந்தகோடி
எரியில் வெந்தி டாத கரிநி ரம்ப வேணும்
இதுபழைய கவுரி பாஷாண வுண்டை
யிடுசகல வேதி பூநாக செம்பின்
ஈயம் ஆனதொர் இரதமும் எண்பலம்
ஏழு கோடியும் இரவு சிவந்திடும்
யமுனை நீர்கொடு குகைபதி னாயிரம்
இறுக வேசமை நிலஅறை யூடுவை
எழுபதொ டெண்பது வண்டியி லேபதர்
இடுகொடு வந்து சொரிந்து குவாலிடு
யாமொழி படரச வாதந் தந்தன
நீசிவ குருவுப காரங் கண்டிரு
இரதமொ டுருகிய சருகு பித்தளை
இவைஇவை குகைதொறும் இடை நறுக்கிவை
எற்ற வந்தி ராது பொய்க்காளல
எட்டி ரண்டு மாறு தப்பாதுகொள்
எழுப தக்ரோணி புடமுள செங்களம்
ரணமு கத்தானை படையொடு வந்திரு
ஈழம்வெகு கோடி யாமீந்திட
ஏழுநிலை மாட நீமேய்ந்துகொள்
இபத்திரள் உரித்தன பருத்தன துருத்திகள்
இலக்கற உனக்கரு கடுக்கிவை சடக்கென
யாவும் வாய்ப்பது சத்யம் உனக்கிவை
ஏழு நாட்டரும் மெத்த விளைத்தனம்
இறைவர் குன்ற மானை மணம கிழ்ந்த நாளில்
இணையில் அண்ட ரோடும் உணவு கொண்ட தாகும்
எமது பசிதீர மாராச இந்த்ர
அமுது படைபோத ஆகாச கங்கை
ஆறு போலநெய் சொரிவட கம்படை
நூறு சாலொடு பொரியலை இங்கழை
இடுக மாவடு வடையிடை கீரையி
லவணம் ஊறிய கறியடை வேபடை
இருபது தண்டை யுடும்பு குவால்சமை
துருவைகள் பன்றி சமைந்தஎ லாம்அழை
யாமைஅ வியல்முயல் ஆணங் கண்டறி
யோமிது சிவசிவ மேலெங் கும்படை
இடைவெளி யறமிகு விடுக ருக்கலை
யிறவகை கயல்கெளி றிவைபொ டித்தன
எட்டு வண்டி வாளை யிற்பீலியில்
இட்ட முண்டு தீயன் முற்பாடழை
இடைகொ ழுப்பாடில் இளையஎ லும்புடன்
அடைசு ரைக்காயில் அடுபடை முன்கறி
ஈறுபுளி வார்வி டாய்போம்படி
ஏடு பிரியாத பால்தேன்சொரி
இருக்கிற சருக்கரை வருக்கை கதலிக்கனி
ரசத்தினை யனைத்தையும் இலைக்குள் அடையப்படை
ஈக பாக்குடன் வெற்றிலை கர்ப்புரம்
யாரு மேத்த இனிச்சுகம் உற்றிரு;
முருகன் பெருமை .. சித்தர்களுள் ப்ரசித்தி பெற்றவர்
முருகன் திருப்புகழைக் கற்றவரே
மிடைத ரும்ப்ர வாள சடைபெ ரும்ப்ர வாக
விமலர் கொன்றை மாலை தருண சந்த்ர ரேகை
விரவு மணநாறு பாதார விந்த
விதரண விநோத மாதாவின் மைந்தன்
மீன கேதனன் உருவின் மிகுந்தருள்
தான வாரிதி சரவண சம்பவன்
விகிர்தி வேதனன் மவுன சுகாதனன்
அகில காரணன் அகில கலாதரன்
விகசித சுந்தர சந்தன பாளித
ம்ருகமத குங்கும கஞ்சப யோதரி
வேழுமு முழைகளும் ஆரும் பைம்புனம்
மேவுறு குறமகள் மேவுந் திண்புயன்
விரிகடல் துகள்எழ வெகுளும் விக்ரமன்
அரிதிரு மருமகன் அறுமு கத்தவன்
வெட்சி கொண்ட தோளன் வெற்பூடுற
விட்ட வென்றி வேல்மு ழுச்சேவகன்
வெருவு நக்கீரர் சரணென வந்தருள்
முருக னிஷ்க்ரோத முநிகுண பஞ்சரன்
மேதகுபு ராண வேதாங்குரன்
ஓதரிய மோன ஞானாங்குரன்
மிகைத்தவர் புரத்ரயம் எரித்தவர் ப்ரியப்பட
அகத்திய முநிக்கொரு தமிழ்த்ரயம் உரைத்தவன்
வேத மூர்த்தி திருத்தணி வெற்புறை
சோதி கார்த்திகை பெற்ற விளக்கொளி
வெகுளி வென்ற வேள்வி முநிவர் சங்கம் ஏற
விரவும் இந்த்ர லோக வழிதி றந்த மீளி
மிகவிருது கூறு மேவார்கள் கண்டன்
விகட அசுரேசர் சாமோது சண்டன்
மேக வாகன மிகுமத வெண்கய
பாக சாதன னகரி புரந்தவன்
விபுத தாரகன் விபுத திவாகரன்
விபுத தேசிகன் விபுத சிகாமணி
விபரித கஞ்ச விரிஞ்ச பராமுகன்
அபிநவ கந்தன் அடைந்தவர் தாபரன்
மேருவை யிடிபட மோதுஞ் சங்க்ரம
தாரகன் மகுட விபாடன் புங்கவன்
வெயிலுமிழ் கொடியொடு வினைமு கத்தினின்
மயில்மிசை வருமொரு வரதன் நிர்ப்பயன்
வித்தகன் சுவாமி நிர்ப்பாவகன்
சத்தியன் ப்ரதாப வித்யாதரன்
விரத நட்பாளர் பரியும் அசஞ்சலன்
நிருத நிட்டூரன் நிருதர் பயங்கரன்
வீரமத லோக வேள் காங்கெயன்
சூரரண சூர சூராந்தகன்
வினைப்பகை அறுப்பவன் நினைத்தது முடிப்பவன்
மனத்துயர் கெடுத்தெனை வளர்த்தருள் க்ருபைக்கடல்
வேலன் வாய்த்த திருப்புகழ் கற்றவர்
சீலம் ஏத்திய சித்தப்ர சித்தரே.
சித்து வகுப்பு (பதம் பிரித்தது)
அடல் புனைந்த வேலு(ம்) மயிலும் என்றும் வாழி
அரியதொன்று கூற அருகிருந்து கேண்மின்
அளவில் பலகாயமோடு ஆடி அண்டர்
அறிய விளையாடலாம் அவர் மூலி ஒன்றில்
ஆசை வேறிலை அறுமுகவன் திரு
ஆணை மேருவை அடிதலை கண்டனம்
அகில லோகமும் அடைவடைவே முதல்
அருளினோம் அது சிவனறியாதலடு
அமையும் எனும்படி நின்ற மநோரதம்
அவை முழுதும் தருவம் பதறாதுகொள்
ஆதியு(ம்) முடிவும் இல் ஆனந்தம் தரும்
ஆறிரு கரதலநாதன் தந்தவை
(பச்சிலை மூலிகைகள், மருந்து வகைகள்).
அவுஷதம் உளசில கிலுகிலுப்பைகள்
அரசிலை நறுவிலி கரிய கக்கரி
அத்தி செம்பி ராகை முள்காவளை
துத்தி சங்கம் ஓர் இதழ்த் தாமரை
அவுரி கற்றாழை ஒடுவை குறிச்சிலி
சிவிறி கத்தாரி பொடுதலை சண்பகம்
ஆரை கொடுவேலி வேல் காச்சிரம்
வீரை இருவேலி பேரீந்து இலை
அமுக்குரவு எருக்கிலை முருக்கிதழ் செருப்படை
அகத்தி தமரத்தை மதமத்தமொடு பித்திகை
ஆலம் ஆத்தி கடுக்கை கொடிக்கழல்
கோலி தேட்கடை நெய்க்கொடை வக்கணை
அகில் பரம்பைகாரை துடரி தும்பை சூரை
அலரி சம்பு நாவல் மருது சிந்து வாரம்
அறுகு தழுதாழை மா பாலை புன்கு
புரசு பழுபாகல் பூலா அழிச்சில்
ஆயில் ஆவிரை இறலி இரும்பிலி
ஆடி ஆவணி புடமிட என்று அழை
அவனி பாடலம் அனலம் மகீருகம்
இவை சமூலமும் எழுபது சால் அடை
அதிமதுரம் தகரம் சிறு பாலடை
பதிமுக வெந்தயம் மோதகம்
ஆறிடை அபின் அரிதாரம் கந்தகம்
நூறிடை திரிபலை ஓர் ஒன்று எண்பலம்
அதிவிடயம் மொழி கிருமி சத்ருவும்
அனல் முறுகலும் அற முறுகு துத்தமும்
அற்பம் ஒன்று கீரை வித்தேழிடை
அத்தில் ஒன்று பாதி தக்கோலமும்
அடவி கச்சோல(ம்) நிமிளை நறும்பிசின்
அரிதம் வெட்பாலை அரிசி கருங்கணி
ஆமலகம் ஏலம் நான்மூன்று இடை
சேமம் சிலை கூட லோக அச்சனம்
அரப்பொடி கடிப்பகை விடத்திரணம்
அப்பிரகசத்தை சதகுப்பி விதை கொத்தமலி திப்பிலி
ஆலி கோட்டம் எலிப்பகை சச்சு இலை
நீலி காய்ச்சு நிலப்பனை கற்பிசின்
மடல் சிவந்த தாழை மண வசம்பு நீலம்
வரு குரும்பை கோடல் துருசு சம்பிராணி
மரிசி வசவாசி காகீ ச மச்சள்
மகிழவிதை மேதை மாமேதை குன்றி
வாரிவாய் நுரை சயில(ம்) சலம்புரி
பூரி வாதுமை சணவு பெருங்குமிழ்
வடுவில் சீரக(ம்) பல(ம்) மயிரோசனை
கடுகுரோகணி சிவதை மனோசிலை
வகைவகை கொண்டு ஒரு மண்டல(ம்) மோரொடு
குகையினில் எண்பது செம்பினில் ஊறவை
வாத(ம்) நல்வழிகள் அநேகம் பண்டையில்
வாகடம் அல குருநாதன் தந்தது
வழிபடும் அரி அர(ன்) பிரமர் உட்பட
மொழிகிற வகை இது சிறிது பெற்றிலர்
மற்றும் இந்த்ரசாலம் உச்சாடனம்
முற்று(ம்) இங்ஙனே தரத் தாழ்வு இலை
மதலையர்க்கு ஈது மொழிவது பண்பு அல
கதவினில் தாழை இடு பயம் ஒன்றிலை
வாலுழுவை ஓரி காராம்பசு
வாலின்மயிர் கீரி தேவாங்கு அழை
மரித்தவர் சனித்த குழி உப்பு உறு சலத்தினை
வடித்து இனிது எடுத்து ஒரு குடத்தினில் நிறைத்துவை
மாறு இல் தோத்திர(ம்) வித்தை பலித்திடின்
மாடை சேர்க்க வருத்தம் உனக்கு இலை
ரசவாதி கேட்பன
மணம் அது இன்று நாளை என மொழிந்து கேளு
மனைகள் எங்கும் ஓடி இனி விரைந்து தேடு
வளையல் குழைபீலி காலாழி தண்டை
மணி வயிர(ம்) வீடு மேலீடு செம்பொன்
வாளி பாடக(ம்) மணி பிறை சங்கிலி
பாளை சூடக(ம்) மயிலம் இலம்பகம்
மவுலி நூபுர(ம்) மயில் திருவாசிகை
சவடி தோள்வளை முகவளை மேல்வளை
மரகத குண்டலம் வெண்டய(ம்) மேகலை
அரசிலை கம்பி குறுங்குணி சாலகம்
வார் அணி உடைமணி ஆரம் கிங்கிணி
வாகுவலய(ம்) நெளி பீடம் கண்டிகை
மணி மகரிகை வளை திகிரி பட்டிகை
பணிகளில் அழகிய பணிகள் கொக்கிகள்
வட்ட அம்பொன் ஓலை முத்தாவளி
சுட்டி சந்து காறை கைக்காறைகள்
வடக(ம்) முத்தோலை அரைவடமும் செறி
கடகம் வித்தார(ம்) மகர நெடுங்குழை
மாதரணி தாலி நூல் காச்சனமாலிகை
மதாணி பீதாம்பரம்
மதிப்பரிய கைச்சரி சரப்பணி இலைச்சினை
பதக்கம் இவை உட்பட அணிப்படலம் இட்டுவை
மாடை பாட்டி புதைத்த குடப்பணமோடு
கூட்டி உருக்க விருப்புடன்
இடு ப்ரசங்கி யாமல் உலை அனந்த கோடி
எரியில் வெந்திடாத கரி நிரம்ப வேணும்
இதுபழைய கவுரி பாஷாண உண்டை
இடு சகலவேதி பூநாக(ம்) செம்பின்
ஈயம் ஆனது ஓர் இரதமும் எண்பலம்
ஏழு கோடியும் இரவு சிவந்திடும்
யமுனை நீர்கொடு குகை பதினாயிரம்
இறுகவே சமை நில அறையூடு வை
எழுபதொடு எண்பது வண்டியிலே பதர்
இடு கொடுவந்து சொரிந்து குவால் இடு
யா(ம்) மொழிபட ரசவாதம் தந்தன
நீ சிவகுரு உபகாரம் கண்டு இரு
இரதமொடு உருகிய சருகு பித்தளை
இவைஇவை குகைதொறும் இடை நறுக்கி வை
எற்ற வந்து இராது பொய்க்கு ஆள் அல
எட்டு இரண்டும் ஆறு தப்பாது கொள்
எழுபது அக்ரோணி புடமுள செங்களம்
ரணமுகத்து ஆனை படையொடு வந்து இரு
ஈழம் வெகு கோடி யாம் ஈந்திட
ஏழு நிலை மாட(ம்) நீ மேய்ந்துகொள்
இபத்திரள் உரித்தன பருத்தன துருத்திகள்
இலக்கு அற உனக்கு அருகு அடுக்கி வை சடக்கென
யாவும் வாய்ப்பது சத்யம் உனக்கு இவை
ஏழு நாட்டரும் மெத்த விளைத்தனம்
இறைவர் குன்றமானை மணம் மகிழ்ந்த நாளில்
இணை இல் அண்டரோடும் உணவு கொண்டதாகும்
எமது பசி தீர மாராச இந்த்ர
அமுது படை போத ஆகாச கங்கை
ஆறு போல நெய் சொரி வடகம் படை
நூறு சாலொடு பொரியலை இங்கு அழை
இடுக மாவடு வடை இடை கீரையி(ல்)
லவணம் ஊறிய கறி அடைவே படை
இருபது தண்டை உடும்பு குவால் சமை
துருவைகள் பன்றி சமைந்த எலாம்அழை
ஆமை அவியல் முயல் ஆணம் கண்டறியோம்
இது சிவசிவ மேல் எங்கும் படை
இடைவெளி அற மிகு இடு கரு கலை
இறவகை கயல் கெளிறு இவை பொடித்தன
எட்டு வண்டி வாளையில் பீலியில்
இட்டமுண்டு தீயன் முற்பாடு அழை
இடை கொழுப்பாடு இல் இளைய எலும்புடன்
அடை சுரைக்காயில் அடு படை முன்கறி
ஈறு புளி வார் விடாய் போம்படி
ஏடு பிரியாத பால் தேன் சொரி
இருக்கிற சருக்கரை வருக்கை கதலிக்கனி
ரசத்தினை அனைத்தையும் இலைக்குள் அடையப் படை
ஈக பாக்குடன் வெற்றிலை கர்ப்புரம்
யாரும் ஏத்த இனிச் சுகம் உற்று இரு;
முருகன் பெருமை
சித்தர்களுள் ப்ரசித்தி பெற்றவர் முருகன் திருப்புகழைக் கற்றவரே
மிடை தரும் ப்ரவாள சடை பெரும் ப்ரவாக
விமலர் கொன்றை மாலை தருண சந்த்ரரேகை
விரவு மணநாறு பாதார விந்த
விதரண விநோத(ம்) மாதாவின் மைந்தன்
மீனகேதனன் உருவின் மிகுந்து அருள்
தானவாரிதி சரவண சம்பவன்
விகிர்தி வேதனன் மவுன சுகாதனன்
அகில காரணன் அகில கலாதரன்
விகசித சுந்தர சந்தன பாளித(ம்)
ம்ருகமத குங்கும(ம்) கச்ச(ம்) பயோதரி
வேழமும் உழைகளும் ஆரும் பைம்புனம்
மேவுறு குறமகள் மேவும் திண்புயன்
விரிகடல் துகள்எழ வெகுளும் விக்ரமன்
அரிதிரு மருமகன் அறு முகத்தவன்
வெட்சி கொண்ட தோளன் வெற்பு ஊடுற
விட்ட வென்றி வேல் முழுச்சேவகன்
வெருவு நக்கீரர் சரÿணன வந்தருள்
முருகன் நிஷ்க்ரோத முநி குண பச்சரன்
மேதகு புராண வேத அங்குரன்
ஓத அரிய மோன ஞான அங்குரன்
மிகைத்தவர் புரத்ரயம் எரித்தவர் ப்ரியப்பட
அகத்திய முநிக்கு ஒரு தமிழ்த்ரயம் உரைத்தவன்
வேத மூர்த்தி திருத்தணி வெற்புறை
சோதி கார்த்திகை பெற்ற விளக்கொளி
வெகுளி வென்ற வேள்வி முநிவர் சங்கம் ஏற
விரவும் இந்த்ர லோக வழி திறந்த மீளி
மிக விருது கூறு மேவார்கள் கண்டன்
விகட(ம்) அசுரேசர் சா மோது சண்டன்
மேக வாகன மிகுமத வெண்கய
பாகசாதனன் நகரி புரந்தவன்
விபுத தாரகன் விபுத திவாகரன்
விபுத தேசிகன் விபுத சிகாமணி
விபரித(ம்) கச்ச(ம்) விரிச்ச(ம்) பராமுகன்
அபிநவ கந்தன் அடைந்தவர் தாபரன்
மேருவை இடிபட மோதும் சங்க்ரம
தாரகன் மகுட(ம்) விபாடன் புங்கவன்
வெயில் உமிழ் கொடியொடு வினை முகத்தினில்
மயில்மிசை வருமொரு வரதன் நிர்ப்பயன்
வித்தகன் சுவாமி நிர்ப்பாவகன்
சத்தியன் ப்ரதாப வித்யாதரன்
விரத நட்பாளர் பரியும் அசச்சலன்
நிருத(ர்) நிட்டூரன் நிருதர் பயங்கரன்
வீர மத லோக வேள் காங்கெயன்
சூர ரண சூர சூர் அந்தகன்
வினைப்பகை அறுப்பவன் நினைத்தது முடிப்பவன்
மனத்துயர் கெடுத்து எனை வளர்த்து அருள் க்ருபைக்கடல்
வேலன் வாய்த்த திருப்புகழ் கற்றவர்
சீலம் ஏத்திய சித்த ப்ரசித்தரே
பதவுரை
வலிமை வாய்ந்த வேலுமயிலும் எஞ்ஞான்றும் வாழ்வதாக; அருமையான விஷயம் ஒன்று நான் சொல்லப்போகிறேன்; அதை என் பக்கத்தே இருந்து கேட்பீர்களVக
ஒன்றில் ஒரு பச்சிலை மூலிகை ஒன்றின் உதவி கொண்டே, கணக்கற்ற, பலவித தேகத்துடன், உலகில் திரிந்து அண்டர் தேவர்கள் அறிய விளையாடலாம்
எமக்கு வேறு ஆசை கிடையாது; ஆறுமுகக் கடவுள்பால் சத்தியம் செய்து உரைக்கின்றேன் (யாம் கூறுவதெல்லாம் உண்மை என்றபடி) (பொன்மயமான) மேருமலையை அடியைத் தலையாக - தலையை அடியாகத் தலைகீழாகப் புரட்டிப் பார்த்திருக்கின்றோம்;
எல்லா உலகங்களையும் முறை முறையாக - வரிசை முறையாக முதலிலே சிருஷ்டித்தோம் (உண்டாக்கினோம்) அச்செய்கை சிவபிரான் அறியாத தொன்றன்று; அவர் அறிந்ததே - சிவபிரான் அறிய சகல லோகங்களையும் முறைப்படி படைத்தோம் - என்றபடி
போதும் போதும் என்று சொல்லும்படி, நிலைத்துள்ள திருப்தியை அடைய, மனத்திலே நீ ஆசைப்பட்டவை எல்லாவற்றையும், கொடுப்போம்; நீ நிதானமாய்ப் (ஆத்திரப்படாமல்) பெற்றுக்கொள்
ஆதி அந்தம், இல்லாத - முடிவற்ற பேரானந்தத்தைத் தருகின்ற பன்னிருகைப் பிரானாகிய முருகவேள் எமக்கு உபதேசித்துக் கொடுத்தவையான
மருந்து வகைகள் சில உண்டு; (கூறுகின்றேன்), ஒரு செடிவகை அரசமரத்தின் இலைகள் சிறு நறுவிலி, பெரு நறுவிலி, நாய் நறுவிலி என வகைப்படும் சிறு மரவகை, பசுமைநிறைந்த பசிய, முள்வெள்ளரி
அத்தி மரத்து இலை வேர் செம்பை ராகி என்பன முள்காவளை என்னும் பூடு துத்திக்கீரையின் இலை இசங்கு எனப்படும் சங்கஞ்செடி ஒர் இதழ்த் தாமரை எனப்படும் சிறு பூண்டு
நீலிச்செடி ஒரு பூடு ஒடு எனப்படும் நிலப்பாலை காதில் அணிதற்குரிய பூ வகை விசிறி என்னும் செடிவகை கத்தரிச்செடி ஒரு பூண்டு வகை சண்பக மரம்
- கீரை வகை கருங் கொடிவேலி வேலமரம் காஞ்சிரம் - எட்டி மரம் ஒரு மரவகை வெட்டிவேர் பேரீச்ச மரத்தின் இலை
அமுக்கினாங்கிழங்கு, எருக்கஞ்செடியின் இலை பலாமரத்தின் இதழ் இலை படர் கொடிவகை அகத்திக் கீரைச்செடி
ஒருமரவகை பொன்னூமத்தை - இவைகளுடன் சாதி மல்லிகை (அல்லது சிறு சண்பகம்)
ஆலமரம் ஆத்திப்பூச்செடி கொன்றை கழற்சிக்காய் கொடி இலந்தை ஒரு மருந்துப் பூடுவகை - நெய்க்கொட்டை ஒரு மரவகை - பூவந்தி மரம் (புன்கு எனலுமாம்) மலைப்புன்கு
ஒருவகை வாசனை மரம், வன்னிமரம் காட்டுச் செடிவகை செடிவகை தும்பை செடிவகை அலரிச்செடி சம்புநாவல் கரு நாவல் மருத மரவகை நொச்சி
அறுகு வாதமடக்கி மாமரம் மரவகை புன்கமரம் புரசு - பூவரசுமரம் கொடிவகை செடிவகை மரவகை
மதகிரி வேம்பு செடிவகை இத்திமரம் கல்லால் செடிவகை, (ஆகிய இவைகளின் உறுப்புக்களை) ஆடி, ஆவணி மாதத்தில் நெருப்பில் சுடவைத்துப் பக்குவப் படுத்துவதற்கு என்று வரவழைத்து (அவையுடன்)
நிலத்துப் பாதிரி செங்கொடிவேலி என்னும் கொடிவகை பூமியில் விளைவனவாய
இந்த எழுபது பொருள்களின் வேர் முதல் இலை ஈறாகவுள்ள எல்லாவற்றையும், எழுபது சால்களுக்குள் (மிடாக்களுள்ளே) பனைகளுள் அடைத்து வைப்பாயாக (அல்லது இவ்வாறு எழுபது மிடாக்கள் நிறைய - (அடை) பச்சிலை வகைகள்; பின்னும்)
பூடுவகை, வாசனை மரவகை ஒரு பூடுவகை, (பதிய வைக்கப்பட்டு) விதைக்கப்பட்டு, (முகம்) முகத்தைக் காட்டுகின்ற முளைக்கின்ற செடிவகை, இன் கய (அல்லது மின் கய) இனிய அல்லது ஒளிவிடும் பெருமை உள்ள மோதகவல்லி என்னும் மரத்துப்பட்டை
ஆறு எடை அளவுக்கு அபின், தாளக பாஷாணம் கந்தகம் என்னும் பொருள், நூறு எடை அளவுக்குத் திரிபலை, எட்டு பலம் அளவு
அதிவிடயம் என்னும் மருந்து, மொழி - சொல்லப்படும், ) கிருமி நாசம் எனப்படும் மர மருந்து நெருப்பில் காய்ந்து கரிந்ததும், மிகவும், முதிர்ந்ததுமான துத்தம் என்னும் பாஷாணமும் ë
சிறுமை, பொருந்தியதான கீரையில் ஏழு எடை அளவு விதையும், அதனில் ஒரு பாதி அளவு தக்கோலமும்
காடுகளிற் கிடைக்கும் கிச்சிலிக் கிழங்கும், செவ் வெண்மையான கல்வகையும், - வாசனைப்
பிசினும், பசுமையான பொன்னிறமுள்ள வெட்பாலை மரத்தின் உறுப்புக்களும், அரிசியும், பருத்தி வகையும்.
நெல்லி ஏலம் இவை பன்னிரண்டு எடை அளவு, பத்திரமான இடத்தில் வைப்பதற்குச் மருந்து அரைக்கும் குழி அம்மி, அல்லது நன்மை தரும் சிலாசத்து என்னும் மருந்து - அதனுடன், உலகத்தில் உள்ள மறைபொருள்களைக் காட்டும் மையும்
இரும்புத் தூள், வேப்பிலை, விஷப் புல், அந்த விஷத்தை, கொல்லுதலை உடையவை, சதகுப்பி என்னும் (மருந்துப் பூண்டுவகையின்) விதை கொத்தமல்லி, திப்பிலி
கள், ஒரு வேர், - பூனை வணங்கி என்னும் குப்பைமேனி இலை, நீர்ச் சுண்டியின் இலை, அவுரி, காய்ச்சுக் கட்டி நிலப்பனை பிசின் பட்டை(பட்டை - ஒர் அங்குல கனம்)
மடல்கள் சிவந்த தாழை, மணமுள்ள வசம்பு, கருங்குவளை, எழுகின்ற, தெங்கு பனைகளின் இளங்காய், வெண்காந்தள், மயில் துத்தம் (மருந்து வகை), தூபவர்க்கப் பிசின்
செடிவகை, வசம்பு, சாதிபத்திரி, விளா - அதனுடன் மஞ்சள், மகிழம்பூவின் விதை, பொற்றலைக்
கையாந்தகரை என்னும் மருந்துப் பூடுவகை (இது) சிறந்த, அறிவைத் தருவது பேரறிவைத்தருவது; குன்றிமணி, குண்டுமணி
கடல்நுரை, மலையில் (சுனைகளில் உள்ள) சங்கு ஆனை புளியமரம், வாதுமை, சணாவு - கையாந்தகரை கரிசலாங்கண்ணி, மரவகை
குற்றமில்லாத, சீரகம், சாதிக்காய், என்பது கோரோசனை,, சிவதைப் பூண்டு, பாஷாண மருந்து,
மேற்சொன்னவையை வகைவகையாக எடுத்துக் கொண்டு ஒரு மண்டலம் (40, 41, அல்லது 45, 48 நாள் கொண்ட கால அளவு) மோருடன் சேர்த்துக், உலோகங்களை உருக்கும் பாத்திரத்தில், எண்பது பாத்திரங்களில் ஊற வைப்பாயாக,
ரசவாதம் செய்யும், நல்ல வகைகள் பல உண்டு; முன்பு, வைத்திய நூல் மாத்திரம் அன்று குரு மூர்த்தியாம்îமுருகவேள் எனக்கு உபதேசித்தது
வழிபடுகின்ற திருமால், சிவன், பிரமா முதலானவர்கள்(கூட), எனக்கு முருகவேளVல்
உபதேசிக்கப்பட்டு, யான் எடுத்துக் கூறும் இந்த (ரசவாத தந்திரவகையை) கொஞ்சம்கூட உபதேசிக்கப்பெற்றிலர்;
இது மாத்திரம் அன்று; மாய வித்தைகள் (அற்புதங்காட்டும்) வித்தை பேயோட்டுகை பேய் ஒட்டுதல் முதலிய, எல்லாவித அஷ்ட கருமங்களையும் இவ்விடத்திலே தரத், ஒரு தடை இல்லை - ஒரு குற்றமும் இல்லை;
குழந்தைகளுக்கு, இவையெலாம் எடுத்துச் சொல்வது, முறையன்று: கதவுக்குத் தாழ்ப்பாளை போடும்படியான, அச்சம் ரகசியம் ஒன்றும் இல்லை (அறைக்குள் ரகசியமாகச் செய்ய வேண்டியதில்லை (பகிரங்கமாகச் செய்யலாம்) என்றபடி)
உழுவை புலியின் வால் (அல்லது) வாலுளுவை என்னும் கொடியுடன் முது நரி, நாக்கும், முலைக் காம்பும் கருநிறமாக உள்ள தெய்வப் பசு - மறு நிறம் கலவாத கறுத்த பசு - அத்தகைய பசுவின் வாலின் மயிர், கீரிப்பிள்ளை, தேவாங்கு இவைகளை வரவழைப்பாயாக;
இறந்தவர்கள் புதைத்துள்ள அடக்கப் பள்ளத்தில் இடப்பட்டுள்ள உப்பு ஊறிய ¤லத்தை நன்றாக வடித்தெடுத்து, ஒரு குடத்தினில் நிறையும்படி வைப்பாயாக.
வேறுபாடில்லாத (வகையில்) சரியாகத் தோத்திரங்களைக் கூறுவதால், வித்தை (ரசவாத வித்தை) பயன்பட்டுப் பலன் கொடுக்குமாயின் பொன், சேர்க்கும் வகையில், வருத்தமே (உனக்கொன்றும்) இலை. இருக்காது.
ரசவாதி கேட்பன
(மணம் அது இன்று நாளை(என மொழிந்து(கேளு)(மனைகள்)38. வளையல் குழைபீலி காலாழி தண்டை மணி வயிர(ம்) வீடு மேலீடு செம்பொன்(மேலீடு)39. வாளி பாடக(ம்) மணி பிறை சங்கிலிபாளை சூடக(ம்) மயிலம் இலம்பகம்(வாளி)(பாடகம்)(மணி)(பிறை(சங்கிலி(பாளை)(சூடகம்(மயிலம்)(இலம்பகம்)40. மவுலி நூபுர(ம்) மயில் திருவாசிகை சவடி தோள்வளை முகவளை மேல்வளை(மவுலி)(நூபுரம்)(மயில் திருவாசிகை(சவடி)(தோள்வளை)(முகவளைக்)(வளை)41. மரகத குண்டலம் வெண்டய(ம்) மேகலை அரசிலை கம்பி குறுங்குணி சாலகம்( மரகத குண்டலம்)(வெண்டயம்)(மேகலை)(அரசிலை)(கம்பி)(குறுங்குணி)(சாலகம்)42. வார் அணி உடைமணி ஆரம் கிங்கிணி வாகுவலய(ம்) நெளி பீடம் கண்டிகை(வார்)(அணி(உடைமணி)(கிங்கிணி)(வாகுவலயம்)(நெளி(பீடம்)(கண்டிகை)43. மணி மகரிகை வளை திகிரி பட்டிகைபணிகளில் அழகிய பணிகள் கொக்கிகள்(மணி)(மகரிகை)(வளை)(திகிரி)(பட்டிகை)(பணிகளில் அழகிய பணிகள்)(கொக்கிகள்)44. வட்ட அம்பொன் ஓலை முத்தாவளி சுட்டி சந்து காறை கைக்காறைகள்(அம்பொன்)(ஓலை)(முத்தாவளி)(சுட்டி)(சந்து காறை)(கைக்காறைகள்)45. வடக(ம்) முத்தோலை அரைவடமும் செறி கடகம் வித்தார(ம்) மகர நெடுங்குழை(வடகம்)(முத்தோலை)(அரைவடம்)(செறி)(கடகம்)(வித்தாரம்)(மகர நெடுங்குழை)46. மாதர் அணி தாலி நூல் காச்சனம்மாலிகை மதாணி பீதாம்பரம்(மாதரணி தாலி நூல்)(காச்சன மாலிகை)(மதாணி)(பீதாம்பரம்)47. மதிப்பரிய கைச்சரி சரப்பணி இலைச்சினைபதக்கம் இவை உட்பட அணிப்படலம் இட்டுவை(மதிப்பரிய)(கைச்சரி)(சரப்பணி(இலைச்சினை)(இட்டு வை)48. மாடை பாட்டி புதைத்த குடப்பணமோ
பொன் வகைகள், தங்க நாணய வகைகள், பாட்டியார் (புதைத்து வைத்துள்ள குடப்பணம்) குடத்துள் சேமித்து வைத்த பணக் குவியல் இவைகளை ஒன்று கூட்டி விருப்புடன் - ஆசையுடனே, (உருக்க) (நெருப்பில்) உருக்குவதற்கு
கொண்டுவந்து சேர்ப்பாயாக வேறு பேச்சு - வீண்பேச்சுப் பேசாமல், அனந்தகோடி - கணக்கற்ற அடுப்புக்களை, எரிந்து சத்துப்போகாத கரியும் நிரம்பவேண்டும்.
இதோ பார் - இந்த உண்டையாயிருக்கும் பொருள் பாஷாண உண்டை என்பது இடப்படும் எல்லாப் பொருள்களையும் இது வேதிக்க வல்லது (பொன்னாக்க வல்லது); ) பூநீறு என்னும் மருந்து, செம்பினோடு
ஈயமும் அதற்கு வேண்டிய ஓர் இரதம் - பாத ரசம் - எட்டு - எட்டு பலம் (சேர), அவை ஏழுகோடியாக ஒர் இரவுக்குள் செந்நிறம் (செம்பொன் நிறம்) அடையும்;
(அதற்காக) (நீ) யமுனையாற்று நீரைக் கொண்டு பதினாயிரம் (குகைகளை) லோகங்களை உருக்கும் பாத்திரங்களை கெட்டியாகவே ) அமைப்பாயாக (அமைத்து அந்தப் பாத்திரங்களை) நில பூமிக்குள் அமைக்கப்பட்ட அறைகளுள் வைப்பாயாக;
(எழுபதொடு எண்பது)(வண்டியில் பதர்)(இடு)(கொடுவந்து)(குவால்இடு)54. யா(ம்) மொழிபட ரசவாதம் தந்தனநீ சிவகுரு உபகாரம் கண்டிரு(யாம்)(மொழிபட)(ரசவாதம்)(சிவகுரு)(உபகாரம்)(கண்டிரு)55. இரதமொடு உருகிய சருகு பித்தளைஇவைஇவை குகைதொறும் இடை நறுக்கி வை(இரதமொடு)(சருகு)(இவை)(குகைதொறும்)(இடை)(நறுக்கி வை)56. எற்ற வந்து இராது பொய்க்கு ஆள் அல எட்டு இரண்டும் ஆறு தப்பாது கொள்(எற்ற வந்து )(இராதுபொய்க்கு ஆள் அல)(எட்டு இரண்டும் ஆறு)(தப்பாது),(கொள்)57. எழுபது அக்ரோணி புடமுள செங்களம்ரணமுகத்து ஆனை படையொடு வந்து இரு(எழுபது அக்ரோணி)(புடமுடன்)(செங்களம்)(ரணமுகத்து)(ஆனை படையொடு)58. ஈழம் வெகு கோடி யாம் ஈந்திட ஏழு நிலை மாட(ம்) நீ மேய்ந்துகொள் (ஈழம்)(வெகு கோடி)(யாம்)(ஈந்திட)(ஏழு நிலை மாடம்)(நீ மேய்ந்துகொள்)59. இபத்திரள் உரித்தன பருத்தன துருத்திகள்இலக்கு அற உனக்கு அருகு அடுக்கி வை சடக்கென(இபத்திரள்(பருத்தன)(துருத்திகள்),(இலக்கு அற)(அருகு)(சடக்கென)60. யாவும் வாய்ப்பது சத்யம் உனக்கு இவை ஏழு நாட்டரும் மெத்த விளைத்தனம்(யாவும்)(வாய்ப்பது)(சத்தியம்)(இவை)(ஏழு நாட்டரும்)(விளைத்தனம்)61. இறைவர் குன்றமானை மணம் மகிழ்ந்த நாளில்இணையில் அண்டரோடும் உணவு கொண்டதாகும்(இறைவர்)(குன்றமானை)(மணம். மகிழ்ந்த நாளில்)(இணையில்)(அண்டரோடு)(உணவு கொண்டதாகும்)62. எமது பசி தீர மாராச இந்த்ரஅமுது படை போத ஆகாச கங்கை(மாராச)(இந்திர)(அமுது)(படை)(போத)63. ஆறு போல நெய் சொரி வடகம் படைநூறு சாலொடு பொரியலை இங்கு அழை(சொரி)(வடகம் படை)(நூறு சாலொடு)(பொரியலை)(அழை)64. இடுக மாவடு வடை இடை கீரையி(ல்) லவணம் ஊறிய கறி அடைவே படை(இடுக மாவடு)(வடை யிடை கீரையில்)(லவணம்)(ஊறிய)(கறி)(அடைவே)(படை)65. இருபது தண்டை உடும்பு குவால் சமை துருவைகள் பன்றி சமைந்த எலாம்அழை(தண்டை)(குவால்)(சமை)(துருவைகள்)(பன்றி)(சமைந்த எலாம்)(அழை)66. ஆமை அவியல் முயல் ஆணம் கண்டறியோம்இது சிவசிவ மேலெங்கும் படை(ஆமை அவியல்)(ஆணம்)(கண்டறியோம்)சிவ சிவ!(மேல் எங்கும் படை)67. இடைவெளி அற மிகு இடு கரு கலை இறவகை கயல் கெளிறு இவை பொடித்தன(இடைவெளி)(அற)(மிகு இடு)(கரு)(கலை)(இறவகை)(கயல்)(கெளிறு)(பொடித்தன)68. எட்டு வண்டி வாளையில் பீலியில்இட்டமுண்டு தீயன் முற்பாடு அழை(வாளையில்)(பீலியில்)(இட்டமுண்டு)(முற்பாடு)(அழை)69. இடை கொழுப்பாடு இல் இளைய எலும்புடன் அடை சுரைக்காயில் அடு படை முன்கறி(இடை)(கொழுப்பாடு இல்)(அடை)(சுரை)(அடு)(படை)(முன்கறி)70. ஈறு புளி வார் விடாய் போம்படிஏடு பிரியாத பால் தேன் சொரி(ஈறு)(புளி)(வார்)(விடாய் போம்படி)(ஏடு பிரியாத)(சொரி)71. இருக்கிற சருக்கரை வருக்கை கதலிக்கனிரசத்தினை அனைத்தையும் இலைக்குள் அடையப் படை(வருக்கை)(கதலிக்கனி)(அடைய)(படை)72. ஈக பாக்குடன் வெற்றிலை கர்ப்புரம் யாரும் ஏத்த இனிச் சுகம் உற்று இரு; (ஈக)(யாரும் ஏத்த)(இனி சுகம் உற்று இரு)முருகன் பெருமை.. சித்தர்களுள் ப்ரசித்தி பெற்றவர் முருகன் திருப்புகழைக் கற்றவரே73. மிடை தரும் ப்ரவாள சடை பெரும் ப்ரவாக விமலர் கொன்றை மாலை தருண சந்த்ரரேகை(மிடைதரும்)(ப்ரவாளம்)(பெரும் ப்ரவாக)(விமலர்)(தருண)74. விரவு மணநாறு பாதார விந்தவிதரண விநோத(ம்) மாதாவின் மைந்தன்(விரவு)(மணம் நாறு)(பாதார விந்த)(விதரண விநோதம்)(மாதாவின்)(மைந்தன்)75. மீன கேதனன் உருவின் மிகுந்து அருள்தானவாரிதி சரவண சம்பவன்(மீன கேதனன்)(உருவின்)(மிகுந்து)(அருள்)(தானவாரிதி)(சரவண சம்பவன்)76. விகிர்தி வேதனன் மவுன சுகாதனன் அகில காரணன் அகில கலாதரன்(விகிர்தி)(வேதனன்)(மவுன சுகாதனன்)(அகிலகாரணன்)( அகில கலாதரன்)77. விகசித சுந்தர சந்தன பாளித(ம்) ம்ருகமத குங்கும(ம்) கச்ச(ம்) பயோதரி(விகசித)(சுந்தர)(சந்தன)(பாளிதம்)(ம்ருகமதம்)(குங்குமம்)(கச்சம்)78. வேழமும் உழைகளும் ஆரும் பைம்புனம் மேவுறு குறமகள் மேவும் திண்புயன்(வேழமும்)(உழைகளும்)(ஆரும்)(பைம்புனம்)(மேவுறு)(குறமகள்)(திண்புயன்)79. விரிகடல் துகள்எழ வெகுளும் விக்ரமன் அரிதிரு மருமகன் அறு முகத்தவன்(துகளெழ)(வெகுளும்)(விக்ரமன்)(அரிதிரு மருமகன்)(அல்லது)80. வெட்சி கொண்ட தோளன் வெற்பூடுற விட்ட வென்றி வேல் முழுச்சேவகன்(வெற்பு)(ஊடுற)(விட்ட)(வென்றி)(வேல்)(முழுச் சேவகன்)81. வெருவு நக்கீரர் சரÿணன வந்தருள் முருகன் நிஷ்க்ரோத முநி குண பச்சரன் (வெருவு)(நிஷ்க்ரோதமுநி)(முநி)(குண பச்சரன்)82. மேதகு புராண வேத அங்குரன்ஓதரிய மோன ஞானாங்குரன்(மேதகு)(அங்குரன்),(அங்குரன்)83. மிகைத்தவர் புரத்ரயம் எரித்தவர் ப்ரியப்பட அகத்திய முநிக்கொரு தமிழ்த்ரயம் உரைத்தவன்(மிகைத்தவர்)(புரத்ரயம்)84. வேத மூர்த்தி திருத்தணி வெற்புறை சோதி கார்த்திகை பெற்ற விளக்கொளி85. வெகுளி வென்ற வேள்வி முநிவர் சங்கம் ஏற விரவும் இந்த்ர லோக வழி திறந்த மீளி(வெகுளி வென்ற)(வேள்வி)(முநிவர் சங்கம்)(ஏற)(விரவும்)(இந்த்ரலோகம்)(வழி திறந்த)(மீளி)86. மிக விருது கூறு மேவார்கள் கண்டன் விகட(ம்) அசுரேசர் சா மோது சண்டன்(மிக)(விருது)(மேவார்கள்)(கண்டன்)(விகடம்)(அசுரேசர்)(சா)(மோது)(சண்டன்)87. மேக வாகன மிகுமத வெண்கயபாகசாதனன் நகரி புரந்தவன்(பாகசாதனன்)(நகரி)(புரந்தவன்)88. விபுத தாரகன் விபுத திவாகரன் விபுத தேசிகன் விபுத சிகாமணி(விபுத)(தாரகன்)(விபுத திவாகரன்)(விபுத தேசிகன்)(விபுதசிகாமணி)89. விபரித(ம்) கச்ச(ம்) விரிச்ச(ம்) பராமுகன் அபிநவ கந்தன் அடைந்தவர் தாபரன்(விபரிதம்)(கச்சம்)(விரிச்சன்)(பராமுகன்)(அபிநவ கந்தன்)(அடைந்தவர்)(தாபரன்)90. மேருவை இடிபட மோதும் சங்க்ரம தாரகன் மகுட(ம்) விபாடன் புங்கவன்(மோதும்)(சங்க்ரம)(மகுடம்)(விபாடன்)(இடிபட)(மோதும்)(சங்க்ரம)(புங்கவன்)91. வெயில் உமிழ் கொடியொடு வினை முகத்தினில் மயில்மிசை வருமொரு வரதன் நிர்ப்பயன்(வினை முகத்தினில்)(நிர்ப்பயன்)92. வித்தகன் சுவாமி நிர்ப்பாவகன்சத்தியன் ப்ரதாப வித்யாதரன்(வித்தகன்)(நிர்ப்பாவகன்)(சத்தியன்)(ப்ரதாப வித்யாதரன்)93. விரத நட்பாளர் பரியும் அசச்சலன் நிருத(ர்) நிட்டூரன் நிருதர் பயங்கரன்(விரத நட்பாளர்)(பரியும்)(அசச்சலன்)(நிருதர்)(நிட்டூரன்)(நிருதர் பயங்கரன்)94. வீர மத லோக வேள் காங்கெயன்சூர ரண சூர சூர் அந்தகன்(வீரம்)(மதம்)(லோகம்)(வேள்)(காங்கெயன்)(ரணம்)(சூர)(சூர்)(அந்தகன்)95. வினைப்பகை அறுப்பவன் நினைத்தது முடிப்பவன் மனத்துயர் கெடுத்து எனை வளர்த்து அருள் க்ருபைக்கடல் (வினை)(அறுப்பவன்)(நினைத்தது)(மனத்துயர்)(கெடுத்து)(எனை)(வளர்த்து அருள்)96. வேலன் வாய்த்த திருப்புகழ் கற்றவர் சீலம் ஏத்திய சித்த ப்ரசித்தரே(வேலன்)(வாய்த்த)(திருப்புகழை)(கற்றவர்)(சீலம் ஏத்திய)(பிரசித்தம்) பேர்பெற்ற சித்தர்களாம், சகல சித்திகளும் கை வந்த பிரசித்தர்களாம் (புகழாளர்களாம்).
பதம் பிரித்து சொல் விளக்கம்
1. அடல் புனைந்த வேலு(ம்) மயிலும் என்றும் வாழி அரியதொன்று கூற அருகிருந்து கேண்மின்
(அடல்) வலிமை (புனைந்த) வாய்ந்த வேலுமயிலும் எஞ்ஞான்றும் வாழ்வதாக; (அரியதொன்று) அருமையான விஷயம் ஒன்று (கூற) நான் சொல்லப்போகிறேன்; அதை (அருகிருந்து) என் பக்கத்தே இருந்து (கேண்மின்) கேட்பீர்களVக
2. அளவில் பலகாயமோடு ஆடி அண்டர் அறிய விளையாடலாம் மூலி ஒன்றில்
(மூலி) ஒன்றில் ஒரு பச்சிலை மூலிகை ஒன்றின் உதவி கொண்டே, (அளவில்) கணக்கற்ற, (பல காயமோடு) பலவித தேகத்துடன், (ஆடி) உலகில் திரிந்து அண்டர் தேவர்கள் அறிய விளையாடலாம்
3. ஆசை வேறிலை அறுமுகவன் திரு ஆணை மேருவை அடிதலை கண்டனம்
(ஆசை வேறிலை) எமக்கு வேறு ஆசை கிடையாது; (அறுமுகவன் திரு ஆணை) ஆறுமுகக் கடவுள்பால் சத்தியம் செய்து உரைக்கின்றேன் (யாம் கூறுவதெல்லாம் உண்மை என்றபடி) (மேருவை) (பொன்மயமான) மேருமலையை (அடிதலை கண்டனம்) அடியைத் தலையாக - தலையை அடியாகத் தலைகீழாகப் புரட்டிப் பார்த்திருக்கின்றோம்;
4. அகில லோகமும் அடைவடைவே முதல் அருளினோம் அது சிவனறியாதல
(அகில லோகமும்) எல்லா உலகங்களையும் அடைவடைவே முறை முறையாக - வரிசை முறையாக (முதல் அருளினோம்) முதலிலே சிருஷ்டித்தோம் (உண்டாக்கினோம்) அச்செய்கை சிவபிரான் அறியாத தொன்றன்று; அவர் அறிந்ததே - சிவபிரான் அறிய சகல லோகங்களையும் முறைப்படி படைத்தோம் - என்றபடி
5. அமையும் எனும்படி நின்ற மநோரதம்
அவை முழுதும் தருவம் பதறாதுகொள்
(அமையும் எனும்படி) போதும் போதும் என்று சொல்லும்படி, (நின்ற) நிலைத்துள்ள திருப்தியை அடைய, (மனோரதம் அவைமுழுதும்) மனத்திலே நீ ஆசைப்பட்டவை எல்லாவற்றையும், (தருவம்) கொடுப்போம்; (பதறாதுகொள்) நீ நிதானமாய்ப் (ஆத்திரப்படாமல்) பெற்றுக்கொள்
6. ஆதியு(ம்) முடிவும் இல் ஆனந்தம் தரும் ஆறிரு கரதலநாதன் தந்தவை
(பச்சிலை மூலிகைகள், மருந்து வகைகள்).
(ஆதியும் முடிவும்) ஆதி அந்தம் (இல்) , இல்லாத - முடிவற்ற (ஆனந்தம் தரு) பேரானந்தத்தைத் தருகின்ற (ஆறிரு கரதலநாதன்) பன்னிருகைப் பிரானாகிய முருகவேள் (தந்தவை) எமக்கு உபதேசித்துக் கொடுத்தவையான
7. அவுஷதம் உளசில கிலுகிலுப்பைகள்
அரசிலை நறுவிலி கரிய கக்கரி
(அவுஷதம் உளசில) மருந்து வகைகள் சில உண்டு; (கூறுகின்றேன்), (கிலுகிலுப்பைகள்) ஒரு செடிவகை (1), (அர சிலை) அரசமரத்தின் இலைகள் (2), (நறுவிலி) சிறு நறுவிலி, பெரு நறுவிலி, நாய் நறுவிலி என வகைப்படும் சிறு மரவகை, (3), (கரிய) பசுமைநிறைந்த பசிய, (கக்கரி) முள்வெள்ளரி (4)
8. அத்தி செம்பி ராகை முள்காவளை துத்தி சங்கம் ஓர் இதழ்த் தாமரை
(அத்தி) அத்தி மரத்து இலை வேர் (5), (செம்பி ராகை) செம்பை (6), ராகி என்பன (7), முள்காவளை என்னும் பூடு (8), (துத்தி) துத்திக்கீரையின் இலை (9), (சங்கம்) இசங்கு எனப்படும் சங்கஞ்செடி (10), ஒர் இதழ்த் தாமரை எனப்படும் சிறு பூண்டு
9. அவுரி கற்றாழை ஒடுவை குறிச்சிலி சிவிறி கத்தாரி பொடுதலை சண்பகம்
(அவுரி) நீலிச்செடி (12), (கற்றாழை) ஒரு பூடு (13) (ஒடுவை) ஒடு எனப்படும் நிலப்பாலை (14), (குறிச்சிலி) காதில் அணிதற்குரிய பூ வகை (15), (சிவிறி) விசிறி என்னும் செடிவகை (16), (கத்தரி) கத்தரிச்செடி (17), (பொடுதலை). ஒரு பூண்டு வகை (18), சண்பக மரம் (19)
10. ஆரை கொடுவேலி வேல் காச்சிரம் வீரை இருவேலி பேரீந்து இலை
(ஆரை) - கீரை வகை (20), (கொடுவேலி) கருங் கொடிவேலி (21), (வேல்) வேலமரம் (22), காஞ்சிரம் - எட்டி மரம் (23),(வீரை) ஒரு மரவகை (24), (இருவேலி) வெட்டிவேர் (25), (பேரீந்து) பேரீச்ச மரத்தின் இலை (26)
11. அமுக்குரவு எருக்கிலை முருக்கிதழ் செருப்படை
அகத்தி தமரத்தை மதமத்தமொடு பித்திகை
(அமுக்குரவு) அமுக்கினாங்கிழங்கு, எருக்கஞ்செடியின் இலை (29), (முருக்கிதழ்) பலாமரத்தின் இதழ் (30) இலை (செருப்படை) படர் கொடிவகை (31), (அகத்தி) அகத்திக் கீரைச்செடி (32), (தமரத்தை)
ஒருமரவகை (33), (மதமத்தம்) பொன்னூமத்தை (34) - இவைகளுடன் (பித்திகை) சாதி மல்லிகை (அல்லது சிறு சண்பகம்) (35)
12. ஆலம் ஆத்தி கடுக்கை கொடிக்கழல் கோலி தேட்கடை நெய்க்கொடை வக்கணை
(ஆலம்) ஆலமரம் (36), (ஆத்தி) ஆத்திப்பூச்செடி (37), (கடுக்கை) கொன்றை (38), (கொடிக்கழல்) கழற்சிக்காய் கொடி (39), (கோலி) இலந்தை (40), (தேட்கடை) ஒரு மருந்துப் பூடுவகை (41), (நெய்க்கொடை) - நெய்க்கொட்டை ஒரு மரவகை - பூவந்தி மரம் (புன்கு எனலுமாம்) (42), (வக்கணை) மலைப்புன்கு (43)
13. அகில் பரம்பை காரை துடரி தும்பை சூரை
அலரி சம்பு நாவல் மருது சிந்து வாரம்
(அகில்) ஒருவகை வாசனை மரம், (44), (பரம்பை) வன்னிமரம் (45), (காரை) காட்டுச் செடிவகை (46), (துடரி) செடிவகை (47), தும்பை (48), (சூரை) செடிவகை (49), அலரிச்செடி (50), (சம்பு) சம்புநாவல் (51), (நாவல் ) கரு நாவல் (52), (மருது) மருத மரவகை (53), (சிந்து வாரம்) நொச்சி (54)
14. அறுகு தழுதாழை மா பாலை புன்கு
புரசு பழுபாகல் பூலா அழிச்சில்
அறுகு (55), (தழுதாழை) வாதமடக்கி (56), (மா) மாமரம் (57), (பாலை) மரவகை (58), புன்கமரம் (59), புரசு - பூவரசுமரம் (60), (பழுபாகல்) கொடிவகை (61), (பூலா) செடிவகை (62), (அழிச்சில்) மரவகை (63)
15. ஆயில் ஆவிரை இறலி இரும்பிலி ஆடி ஆவணி புடமிட என்று அழை
(ஆயில்) மதகிரி வேம்பு (64), (ஆவிரை) செடிவகை (65), (இறலி) இத்திமரம் கல்லால் (66), (இரும்பிலி) செடிவகை, (67), (ஆகிய இவைகளின் உறுப்புக்களை) ஆடி, ஆவணி மாதத்தில் (புடம் இட) நெருப்பில் சுடவைத்துப் பக்குவப் படுத்துவதற்கு என்று (அழை) வரவழைத்து (அவையுடன்)
16. அவனி பாடலம் அனலம் மகீருகம்
இவை சமூலமும் எழுபது சால் அடை
(அவனி) நிலத்துப் (பாடலம்) பாதிரி (68), (அனலம்) செங்கொடிவேலி என்னும் கொடிவகை (69), (மகீருகம்) பூமியில் விளைவனவாய
(கிழங்குகள்) (70), (இவை) இந்த எழுபது பொருள்களின் (சமூலமும்) வேர் முதல் இலை ஈறாகவுள்ள எல்லாவற்றையும், எழுபது சால்களுக்குள் (மிடாக்களுள்ளே) பனைகளுள் (அடை) அடைத்து வைப்பாயாக (அல்லது இவ்வாறு எழுபது மிடாக்கள் நிறைய - (அடை) பச்சிலை வகைகள்; பின்னும்)
17. அதிமதுரம் தகரம் சிறு பாலடை
பதிமுக வெந்தயம் மோதகம்
(அதிமதுரம்) பூடுவகை, (தகரம்) வாசனை மரவகை (சிறு பாலடை) ஒரு பூடுவகை, (பதிமுக) (பதிய வைக்கப்பட்டு) விதைக்கப்பட்டு, (முகம்) முகத்தைக் காட்டுகின்ற முளைக்கின்ற (வெந்தயம்) செடிவகை, இன் கய (அல்லது மின் கய) இனிய அல்லது ஒளிவிடும் பெருமை உள்ள (மோதகம்) மோதகவல்லி என்னும் மரத்துப்பட்டை
18. ஆறிடை அபின் அரிதாரம் கந்தகம்
நூறிடை திரிபலை ஓர் ஒன்று எண்பலம்
(ஆறிடை அபின்) ஆறு எடை அளவுக்கு அபின், (அரிதாரம்) தாளக பாஷாணம் , (கந்தகம்) கந்தகம் என்னும் பொருள், நூறு எடை அளவுக்குத் திரிபலை, (ஓர் ஒன்று எண் பலம்) எட்டு பலம் அளவு
19. அதிவிடயம் மொழி கிருமி சத்ருவும்
அனல் முறுகலும் அற முறுகு துத்தமும்
(அதிவிடயம்) அதிவிடயம் என்னும் மருந்து, மொழி - சொல்லப்படும், (கிருமி சத்ரு ) கிருமி நாசம் எனப்படும் மர மருந்து (அனல்) நெருப்பில் (முறுகலும்) காய்ந்து கரிந்ததும், (அற) மிகவும், (முறுகு) முதிர்ந்ததுமான (துத்தமும்) துத்தம் என்னும் பாஷாணமும் ë
20. அற்பம் ஒன்று கீரை வித்தேழிடை
அத்தில் ஒன்று பாதி தக்கோலமும்
(அற்பம்) சிறுமை, (ஒன்று) பொருந்தியதான கீரையில் (வித்தேழிடை) ஏழு எடை அளவு விதையும், (அத்தில்) அதனில் ஒரு பாதி அளவு தக்கோலமும்
21. அடவி கச்சோல(ம்) நிமிளை நறும்பிசின்
அரிதம் வெட்பாலை அரிசி கருங்கணி
(அடவி) காடுகளிற் கிடைக்கும் (கச்சோலமும்) கிச்சிலிக் கிழங்கும், (நிமிளை) செவ் வெண்மையான கல்வகையும், (நறும்பிசின்) - வாசனைப்
பிசினும், (அரிதம்) பசுமையான பொன்னிறமுள்ள வெட்பாலை மரத்தின் உறுப்புக்களும், அரிசியும், (கருங்கணி) பருத்தி வகையும்.
22. ஆமலகம் ஏலம் நான்மூன்று எடை சேமம் சிலை கூட லோக அச்சனம்
(ஆமலகம்) நெல்லி ஏலம் இவை (நான்மூன்று) (எடை) பன்னிரண்டு எடை அளவு, (சேமம்) பத்திரமான இடத்தில் வைப்பதற்குச் (சிலை) மருந்து அரைக்கும் குழி அம்மி, அல்லது (சேமம்) நன்மை தரும் (சிலை) சிலாசத்து என்னும் மருந்து - (கூட ) அதனுடன், ( லோகம் ) உலகத்தில் உள்ள மறைபொருள்களைக் காட்டும் (அச்சனம்) மையும்
23. அரப்பொடி கடிப்பகை விடத்திரணம் அப் பிரகசத்தை சதகுப்பி விதை கொத்தமலி திப்பிலி
(அரப்பொடி) இரும்புத் தூள், (கடிப்பகை) வேப்பிலை, (விடத்திரணம்) விஷப் புல், (அப்) (ப்ரகசத்தை) அந்த விஷத்தை, (பிரகசம்) கொல்லுதலை உடையவை, சதகுப்பி என்னும் (மருந்துப் பூண்டுவகையின்) விதை கொத்தமல்லி, திப்பிலி
24. ஆலி கோட்டம் எலிப்பகை சச்சு இலை
நீலி காய்ச்சு நிலப்பனை கற்பிசின்
(ஆலி) கள், (கோட்டம்) ஒரு வேர், (எலிப்பகை ) - பூனை வணங்கி என்னும் குப்பைமேனி இலை, (சச்சு இலை) நீர்ச் சுண்டியின் இலை, (நீலி) அவுரி, (காய்ச்சு) காய்ச்சுக் கட்டி (காசுக்கட்டி), நிலப்பனை (செடி வகை), (கற்பிசின்) பிசின் பட்டை(பட்டை - ஒர் அங்குல கனம்)
25. மடல் சிவந்த தாழை மண வசம்பு நீலம் வரு குரும்பை கோடல் துருசு சம்பிராணி
மடல்கள் சிவந்த தாழை, மணமுள்ள வசம்பு, (நீலம்) கருங்குவளை, (வரு) எழுகின்ற, (குரும்பை) தெங்கு பனைகளின் இளங்காய், (கோடல்) வெண்காந்தள், (துருசு) மயில் துத்தம் (மருந்து வகை), (சம்பிராணி) தூபவர்க்கப் பிசின்
26. மரிசி வசவாசி காகீ ச மச்சள்
மகிழவிதை மேதை மாமேதை குன்றி
(மரிசி) செடிவகை, (வசவாசி) வசம்பு, சாதிபத்திரி, (காகி) விளா - (ச) அதனுடன் மஞ்சள், மகிழம்பூவின் விதை, (மேதை) பொற்றலைக்
கையாந்தகரை என்னும் மருந்துப் பூடுவகை (இது) (மா) சிறந்த, (மேதை) அறிவைத் தருவது பேரறிவைத்தருவது; (குன்றி) குன்றிமணி, குண்டுமணி
27. வாரிவாய் நுரை சயில(ம்) சலம்புரி பூரி வாதுமை சணவு பெருங்குமிழ்
(வாரிவாய் நுரை) கடல்நுரை, (சயிலம்) மலையில் (சுனைகளில் உள்ள) (வலம்புரி) சங்கு (பூரி) ஆனை புளியமரம், வாதுமை, (சணவு) சணாவு - கையாந்தகரை கரிசலாங்கண்ணி, (பெருங்குமிழ்) மரவகை
28. வடுவில் சீரக(ம்) பல(ம்) மயிரோசனை
கடுகுரோகணி சிவதை மனோசிலை
(வடுவில்) குற்றமில்லாத, சீரகம், (பலம்) சாதிக்காய், (மயிரோசனை) என்பது கோரோசனை, (கடுகுரோகணி) , (சிவிதை) சிவதைப் பூண்டு, (மனோசிலை) பாஷாண மருந்து,
29. வகைவகை கொண்டு ஒரு மண்டல(ம்) மோரொடு குகையினில் எண்பது செம்பினில் ஊறவை
மேற்சொன்னவையை வகைவகையாக எடுத்துக் கொண்டு ஒரு மண்டலம் (40, 41, அல்லது 45, 48 நாள் கொண்ட கால அளவு) (மோரொடு) மோருடன் சேர்த்துக், (குகையினில்) உலோகங்களை உருக்கும் பாத்திரத்தில், எண்பது (செம்பினில்) பாத்திரங்களில் ஊற வைப்பாயாக,
30. வாத(ம்) நல்வழிகள் அநேகம் பண்டையில் வாகடம் அல குருநாதன் தந்தது
(வாதம்) ரசவாதம் செய்யும், (நல்வழிகள்) நல்ல வகைகள் (அநேகம்) பல உண்டு; (பண்டையில்) முன்பு, (வாகடம்) வைத்திய நூல் (அல) மாத்திரம் அன்று (குருநாதன்) குரு மூர்த்தியாம்îமுருகவேள் (தந்தது) எனக்கு உபதேசித்தது
31. வழிபடும் அரி அர(ன்) பிரமர் உட்பட மொழிகிற வகை இது சிறிது பெற்றிலர்
வழிபடுகின்ற (அரி) திருமால், (அரன்) சிவன், (பிரமர்) பிரமா (உட்பட) முதலானவர்கள்(கூட), (மொழிகிற வகை) எனக்கு முருகவேளVல்
உபதேசிக்கப்பட்டு, யான் எடுத்துக் கூறும் இந்த (ரசவாத தந்திரவகையை) (சிறிது) கொஞ்சம்கூட (பெற்றிலர்) உபதேசிக்கப்பெற்றிலர்;
32. மற்றும் இந்த்ரசாலம் உச்சாடனம் முற்று(ம்) இங்ஙனே தரத் தாழ்வு இலை
(மற்றும்) இது மாத்திரம் அன்று; (இந்த்ரசாலம்) மாய வித்தைகள் (அற்புதங்காட்டும்) வித்தை (உச்சாடனம்) பேயோட்டுகை பேய் ஒட்டுதல் முதலிய (முற்றும்) , எல்லாவித அஷ்ட கருமங்களையும் (இங்ஙனே) இவ்விடத்திலே தரத், (தாழ்வு இல்லை) ஒரு தடை இல்லை - ஒரு குற்றமும் இல்லை;
33. மதலையர்க்கு ஈது மொழிவது பண்பு அல கதவினில் தாழை இடு பயம் ஒன்றிலை
(மதலையர்க்கு) குழந்தைகளுக்கு, (ஈது) இவையெலாம் (மொழிவது) எடுத்துச் சொல்வது, (பண்பு அல) முறையன்று: (கதவினில்) கதவுக்குத் (தாழை) தாழ்ப்பாளை (இடு) போடும்படியான, (பயம் ஒன்றும் இல்லை) அச்சம் ரகசியம் ஒன்றும் இல்லை (அறைக்குள் ரகசியமாகச் செய்ய வேண்டியதில்லை (பகிரங்கமாகச் செய்யலாம்) என்றபடி)
34. வாலுழுவை ஓரி காராம்பசு வாலின்மயிர் கீரி தேவாங்கு அழை
(வாலுழுவை) உழுவை (வால்) புலியின் வால் (அல்லது) வாலுளுவை என்னும் கொடியுடன் (ஓரி) முது நரி, (காராம்பசு) நாக்கும், முலைக் காம்பும் கருநிறமாக உள்ள தெய்வப் பசு - மறு நிறம் கலவாத கறுத்த பசு - அத்தகைய பசுவின் வாலின் மயிர், கீரிப்பிள்ளை, தேவாங்கு (அழை) இவைகளை வரவழைப்பாயாக;
35. மரித்தவர் சனித்த குழி உப்பு உறு சலத்தினை வடித்து இனிது எடுத்து ஒரு குடத்தினில் நிறைத்து வை (மரித்தவர்) இறந்தவர்கள் (சனித்த) புதைத்துள்ள (குழி) அடக்கப் பள்ளத்தில் இடப்பட்டுள்ள உப்பு ஊறிய ¤லத்தை (வடித்து இனிது எடுத்து) நன்றாக வடித்தெடுத்து, ஒரு குடத்தினில் நிறையும்படி வைப்பாயாக.
36. மாறில் தோத்திர(ம்) வித்தை பலித்திடின்
மாடை சேர்க்க வருத்தம் உனக்கு இலை
(மாறில்) வேறுபாடில்லாத (வகையில்) சரியாகத் (தோத்திரம்) தோத்திரங்களைக் கூறுவதால், வித்தை (ரசவாத வித்தை) (பலித்திடின்) பயன்பட்டுப் பலன் கொடுக்குமாயின் (மாடை) பொன், (சேர்க்க) சேர்க்கும் வகையில், (வருத்தம்) வருத்தமே (உனக்கொன்றும்) இலை. இருக்காது.
ரசவாதி கேட்பன
**37. மணம் அது இன்று நாளை என மொழிந்து கேளு மனைகள் எங்கும் ஓடி இனி விரைந்து தே
(மணம் அது இன்று நாளை ) ஒரு கலியாணம் இன்றே செய்யவேண்டி யிருக்கின்றது (என மொழிந்து ) என்று கூறிக் (கேளு) (நீ) கேட்பாயாக! (அதாவது வெகு அவசரமாகத் திருமணம் ஒன்று நிறைவேறவேண்டி யிருக்கின்றது அதற்கு நிரம்பப் பொன் வேண்டியருக்கின்றது) என நீ கேட்பாயாக கேட்டால் உனக்கு வேண்டிய பொன் அவ்வளவும் உடனே கிடைக்கும் வழியைக் கூறுகின்றேன் - அதற்காக (நீ என்ன செய்யவேண்டுமென்றால்) உன் (மனைகள்) உனது வீடுகளில் எல்லா இடத்தும் ஒடிப்போய், இனி வேகமாய்த் தேடுவாயாக (தேடிக் கொண்டு வர வேண்டுவன கூறுவேன், கேள்)
38. வளையல் குழைபீலி காலாழி தண்டை மணி வயிர(ம்) வீடு மேலீடு செம்பொன்
வளையல்கள், குழைகள், பீலிகள், காலாழிகள், தண்டைகள், ரத்னம், வயிரம், வீடு - வீட்டில் (மேலீடு) நிரம்பியுள்ள செம்பொன்கள்,
39. வாளி பாடக(ம்) மணி பிறை சங்கிலி
பாளை சூடக(ம்) மயிலம் இலம்பகம்
(வாளி) ஒருவகைக் காதணி, (பாடகம்) மகளிர் காலணி, (மணி) மாணிக்கத்திரு என்னும் பணி (ஆபரணம்) (பிறை ) மகளிர் தலையில் அணியும் நகை, (சங்கிலி ) வயிரச் சங்கிலி என்னும் அணி, சங்கிலிச் சரங்கள், (பாளை) பாலப் பருவத்துக்கு முன் பருவக் குழந்தைகள் அணியும் (சூடகம் ) கை வளையல்கள், (மயிலம்) மயிலிறகு போன்ற அழகுள்ள (இலம்பகம்) தலைக்கோலம் என்னும் அணி
40. மவுலி நூபுர(ம்) மயில் திருவாசிகை சவடி தோள்வளை முகவளை மேல்வளை
(மவுலி) மணிமுடி (க்ரீடம்), (நூபுரம்) சிலம்பு, (மயில் திருவாசிகை ) மயில் தோகை போன்ற விரித்துள்ள திருவாசி என்னும் ஆபரணம், (சவடி) பொற் சரடுகளின் கொத்தாக அமைந்த கழுத்தணிவகை (தோள்வளை) தோளில் அணியும் வளைவகை (முகவளைக்) முக வட்டத்தின் (வளை) தாழ்ந்து விளங்கும்
41. மரகத குண்டலம் வெண்டய(ம்) மேகலை அரசிலை கம்பி குறுங்குணி சாலகம்
( மரகத குண்டலம்) பச்சை ரத்னக் குண்டலங்கள், (வெண்டயம்) வீரர் காலணி, (மேகலை) இடையில் அணியும் அணி, (அரசிலை) அரைமூடி - சிறுபெண் பிள்ளைகள் அரையில் தரிக்கும் ஒரு ஆபரணம், (கம்பி) காதணி வகை, (குறுங்குணி) குறுங்கண்ணி - (குறுங்கணி) - முடியில் அணியும் மாலை; (சாலகம்) நெற்றியில் அணியும் அணிவிசேடம்
42. வார் அணி உடைமணி ஆரம் கிங்கிணி வாகுவலய(ம்) நெளி பீடம் கண்டிகை
(வார்) கச்சு (ரவிக்கை) மேலணியப்பட்ட (அணி ) ஆபரணங்கள், (உடைமணி) குழந்தைகளின் அரையணி ஆரம் - முத்து மாலை அல்லது ரத்னமணி மாலை, (கிங்கிணி) சதங்கை (வாகுவலயம்) தோளணி, (நெளி ) வளைந்தவிரலணி வகை (பீடம்) ரத்னபீடம், செம்பொற் பீடம் முதலிய, (கண்டிகை) கழுத்தணி
43. மணி மகரிகை வளை திகிரி பட்டிகை
பணிகளில் அழகிய பணிகள் கொக்கிகள்
(மணி) ரத்னத்தாலாய (மகரிகை) சுறாமீன் வடிவுள குறங்கு செறி அணி (வளை) சங்கு வளை - கை வளை: (திகிரி) வட்ட வடிவுள்ள (அணி), (பட்டிகை) ஒட்டியாணம் (பணிகளில் அழகிய பணிகள்) ஆபரணங்களுள் அழகுள்ள ஆபரணங்கள், (கொக்கிகள்) ஹாரம் - சங்கிலி பிணைக்கும் கொக்கிகள்
44. வட்ட அம்பொன் ஓலை முத்தாவளி சுட்டி சந்து காறை கைக்காறைகள்
வட்டவடிவானதும் (அம்பொன்) அழகிய பொன்னாலாயதுமான (ஓலை) காதணி, (முத்தாவளி) முத்து மாலை, (சுட்டி) குழந்தைகளும் மகளிரும் அணிந்துகொள்ளும் நெற்றியணி, (சந்து காறை) ஒருவகைக் கைவளை, (கைக்காறைகள்) ஒருவகைக் கையணிகள்;
45. வடக(ம்) முத்தோலை அரைவடமும் செறி கடகம் வித்தார(ம்) மகர நெடுங்குழை
(வடகம்) மேலாடை - துகில் வகைகள்; (முத்தோலை) முத்துக் கம்மல், (அரைவடம்) அரைச் சதங்கை, (செறி) பொருந்திய (கடகம்) கங்கணம், (வித்தாரம்) மிக்குவிளங்கும் (மகர நெடுங்குழை) மகரமீன் வடிவுள்ள நீண்ட குழைகள்
46. மாதர் அணி தாலி நூல் காச்சனம்
மாலிகை மதாணி பீதாம்பரம்
(மாதரணி தாலி நூல்) பெண்கள் அணியும் தாலிக்கயிறு, (காச்சன மாலிகை) பொன் மாலைகள், (மதாணி) கழுத்தணியின் தொங்கல், (பீதாம்பரம்) பொன்னாடைகள்
47. மதிப்பரிய கைச்சரி சரப்பணி இலைச்சினை
பதக்கம் இவை உட்பட அணிப்படலம் இட்டுவை
(மதிப்பரிய) விலை மதித்தற் கரிதான (கைச்சரி) மகளிர் கையணி வகை,
(சரப்பணி ) வயிரம் அழுத்தின கழுத்தணி வகை, (இலைச்சினை) இலச்சினை - முத்திரை மோதிரம், (பதக்கங்கள் இவை யாவும் உட்பட அணிப்படலம்) ஆபரணக் குவியல்களை கூட்டத்தை (இட்டு வை) கொண்டு வந்து வைப்பாயாக.
**48. மாடை பாட்டி புதைத்த குடப்பணமோ
கூட்டி உ ருக்க விருப்புடன்
(மாடை) பொன் வகைகள், தங்க நாணய வகைகள், (பாட்டி) பாட்டியார் (புதைத்து வைத்துள்ள குடப்பணம்) குடத்துள் சேமித்து வைத்த பணக் குவியல் இவைகளை ஒன்று கூட்டி (உருக்க விருப்புடன்) விருப்புடன் - ஆசையுடனே, (உருக்க) (நெருப்பில்) உருக்குவதற்கு
49. இடு ப்ரசங்கி யாமல் உலை அனந்த கோடி
எரியில் வெந்திடாத கரி நிரம்ப வேணும்
(இடு) கொண்டுவந்து சேர்ப்பாயாக (ப்ரசங்கி யாமல்) வேறு பேச்சு - வீண்பேச்சுப் பேசாமல், (உலை அனந்த கோடி) அனந்தகோடி - கணக்கற்ற (உலைகளை) அடுப்புக்களை, எரிந்து சத்துப்போகாத கரியும் நிரம்பவேண்டும்.
50. இதுபழைய கவுரி பாஷாண உண்டை
இடு சகலவேதி பூநாக(ம்) செம்பின்
(இது) இதோ பார் - இந்த உண்டையாயிருக்கும் பொருள் ( பழைய கவுரி ) பாஷாண உண்டை என்பது (இடு சகலவேதி) இடப்படும் எல்லாப் பொருள்களையும் இது வேதிக்க வல்லது (பொன்னாக்க வல்லது); (பூநாகம் ) பூநீறு என்னும் மருந்து, செம்பினோடு
51. ஈயம் ஆனது ஓர் இரதமும் எண்பலம்
ஏழு கோடியும் இரவு சிவந்திடும்
(ஈயம் ஆனது) ஈயமும் அதற்கு வேண்டிய ஓர் (இரதமும் எண்பலம்) இரதம் - பாத ரசம் - எட்டு - எட்டு பலம் (சேர), அவை ஏழுகோடியாக (இரவு) ஒர் இரவுக்குள் (சிவந்திடும்) செந்நிறம் (செம்பொன் நிறம்) அடையும்;
52. யமுனை நீர்கொடு குகை பதினாயிரம்
இறுகவே சமை நில அறையூடு வை
(அதற்காக) (நீ) யமுனையாற்று நீரைக் கொண்டு (வா), (குகைபதினாயிரம்) பதினாயிரம் (குகைகளை) லோகங்களை உருக்கும் பாத்திரங்களை (இறுகவே) கெட்டியாகவே (சமை ) அமைப்பாயாக (அமைத்து அந்தப் பாத்திரங்களை) நில (அறையூடு) பூமிக்குள் அமைக்கப்பட்ட அறைகளுள் (வை) வைப்பாயாக;
53. எழுபதொடு எண்பது வண்டியிலே பதர்
**இடு கொடுவந்து சொரிந்து குவால் இ
(எழுபதொடு எண்பது) (70+80) 150 (வண்டியில் பதர்) - உமியை, (இடு) இட்டு நிரப்பிக் (கொடுவந்து) கொண்டு வந்து சொரிந்து (குவால்இடு) மேடாகக் குவிப்பாயாக
54. யா(ம்) மொழிபட ரசவாதம் தந்தன
நீ சிவகுரு உபகாரம் கண்டிரு
(இங்ஙனம்) (யாம்) சித்தராகிய யாம் (மொழிபட) பொருள் விளங்கும்படி, (ரசவாதம்) ரசவாத வழிகளைத் விளக்கினோம்;. நீ (சிவகுரு) சிவனுக்கு மூர்த்தியாம் முருகவேளின் (உபகாரம்) உதவியை திருவருள் துணையைக் (கண்டிரு) நம்பியிருப்பாயாக;
55. இரதமொடு உருகிய சருகு பித்தளை
இவைஇவை குகைதொறும் இடை நறுக்கி வை
(இரதமொடு) பாதரசத்தினொடு உருகின (சருகு) உலர்ந்த இலை, பித்தளை (இவை) இவை வகைகளை (குகைதொறும்) வேதிக்கும் பாத்திரங்கள்தோறும் (இடை) மத்தியில், (நறுக்கி வை) துண்டுபடுத்தி வைப்பாயாக
56. எற்ற வந்து இராது பொய்க்கு ஆள் அல எட்டு இரண்டும் ஆறு தப்பாது கொள்
(எற்ற வந்து ) எற்ற - அவசரப்பட்டுக் ( குகைகளைத்) தாக்கி (திறந்து) எடுக்க, (இராது ) பொன் கிட்டாது - (ரசவாதம்) வெற்றி பெறாது - நீதானித்துதான் குகைகளைத் திறந்து எடுக்கவேண்டும். ( பொய்க்கு ஆள் அல) - நான் பொய் சொல்லும் பேர்வழி அன்று (எட்டு இரண்டும் ஆறு) 8 யீ 2 + 6 - பதினாறும் ஆறும் இருபத்திரண்டு நாள் கழித்துத் (தப்பாது), ரசவாத வித்தை பிழையாகாத வகையில், (கொள்) - (வித்தையால் கிடைத்த) பொன்னைக் கொள்வாயாக - அடைவாயாக.
57. எழுபது அக்ரோணி புடமுள செங்களம்
ரணமுகத்து ஆனை படையொடு வந்து இரு
(எழுபது அக்ரோணி) எழுபது பெருஞ் சேனைக் கணக்குள்ள (புடமுடன்) புடமிடும் கலங்களுடன் - (சுத்தி செய்து பக்குவப்படுத்துதற்கு வேண்டிய பாத்திரங்களுடன்) (செங்களம்) போர்க்களத்துக்கு வரும் (ரணமுகத்து) புண் முகம்கொண்ட (ஆனை படையொடு) ஆனை, தேர், குதிரை காலாள் என்னும் நால்வகைப் படைகளுடனே (வெகு கோடிப் பொன்னை எடுத்துச் செல்ல) வந்திருப்பாயாக;
58. ஈழம் வெகு கோடி யாம் ஈந்திட ஏழு நிலை மாட(ம்) நீ மேய்ந்துகொள் (ஈழம்) பொன் (வெகு கோடி) நிரம்பக் கோடிக் கணக்கில் (யாம்) நாம். (ஈந்திட) எடுத்துத் தர, அந்தப் பொன்கொண்டு (ஏழு நிலை மாடம்) ஏழடுக்கு மெத்தை உபரிகை உள்ள மாளிகையை (நீ மேய்ந்துகொள்) நீ கட்டி வாழ்வாயாக.
59. இபத்திரள் உரித்தன பருத்தன துருத்திகள்
இலக்கு அற உனக்கு அருகு அடுக்கி வை சடக்கென
(நான் கொடுக்கப்போகின்ற பொன்திரளை பத்திரப்படுத்துவதற்கு நீ) (இபத்திரள் ) யானைக் கூட்டங்களின் (தோலை) உரித்தன போன்றவையும், (பருத்தன) மிகப்பருமையுள்ளவையுமான (துருத்திகள்), தோல்பைகளை, (இலக்கு அற) ஒரு குறிப்பிலாக் கணக்கில் (கணக்கற்ற வகையில்), உனக்கு (அருகு) சமீபத்தில் அடுக்கி வைப்பாயாக, (சடக்கென) திடீரென்று - விரைவில்
60. யாவும் வாய்ப்பது சத்யம் உனக்கு இவை ஏழு நாட்டரும் மெத்த விளைத்தனம்
(யாவும்) நீ விரும்பிய எண்ணங்கள் யாவும் (பொன் எல்லாம்) (உனக்கு) (வாய்ப்பது) கிடைப்பது (சத்தியம்) திண்ணம்; உனக்கு (இவை) இப் பொற்குவியல்களை, (ஏழு நாட்டரும்) ஏழு உலகினரும் மெத்த - மிக்குள என (நிரம்ப உளஎன்று சொல்லும்படி) (விளைத்தனம்) - உண்டு பண்ணினோம்;
61. இறைவர் குன்றமானை மணம் மகிழ்ந்த நாளில்
இணையில் அண்டரோடும் உணவு கொண்டதாகும்
(இறைவர்) சிவபிரான், (குன்றமானை) இமயமலையின் (மான்போன்ற) மகளை - பார்வதியை, (மணம். மகிழ்ந்த நாளில்) திருமணம் புரிந்து மகிழ்ந்த அந்தத் தினத்திலே, (இணையில்) தமக்கு நிகரிலாத (அண்டரோடு) தேவர்களுடனே இருந்து நாம் (உணவு கொண்டதாகும்) நாம் உணவு கொண்டோம் - அன்று முதல் இன்றளவும் உணவு உண்ணாது - இருக்கின்றோம், ஆதலால் எமக்கு பசி
62. எமது பசி தீர மாராச இந்த்ர
அமுது படை போத ஆகாச கங்கை
எம்முடைய பசி தீரும்படி, (மாராச) மகாரா¤ருக்கு இடும்படியான அத்துணைச் சிறந்ததான, (இந்திர) , இந்த்ர போகமான - மிக மேன்மையான (அமுது) உணவை (படை) படைப்பாயாக - அளிப்பாயாக, (போத) செவ்வையாக; ஆகாச கங்கை
63. ஆறு போல நெய் சொரி வடகம் படை
நூறு சாலொடு பொரியலை இங்கு அழை ஆற்றின் (வீழ்ச்சி) போல, நெய்யைச் (சொரி) சொரிவாயாக; (வடகம் படை) வற்றல்களைப் படைப்பாயாக வைப்பாயாக; (நூறு சாலொடு) நூற்றுக் கணக்கான சால்களில் - பானைகளில் அடங்கிய - (பொரியலை) பொரித்த கறிவகைகளை, இங்கு (அழை) வரவழைப்பாயாக.
64. இடுக மாவடு வடை இடை கீரையி(ல்) லவணம் ஊறிய கறி அடைவே படை
(இடுக மாவடு) மாவடு (ஊறுகாய்) வைப்பாயாக; (வடை யிடை கீரையில்) வடையும் (இடை) அதனுடன் கீரையும், (லவணம்) உப்பு (ஊறிய) ஊறியுள்ள (கறி) கறிவகைகளையும், (அடைவே) முறைப்படி அல்லது கறிவகைகள் எல்லாவற்றையும், (படை) கொண்டுவந்து வைப்பாயாக.
65. இருபது தண்டை உடும்பு குவால் சமை துருவைகள் பன்றி சமைந்த எலாம்அழை
(மேற்சொன்ன மரக்கறி வகைகளுடன் இனி எமக்கு வேண்டிய மாமிச உணவு கூறுவேன்) இருபது (தண்டை) வாலுடன் கூடிய உடும்புகளின் (குவால்) கூட்டத்தை (சமை) சமையல் செய்க; (துருவைகள்) செம்மறியாடுகள், (பன்றி) பன்றிகள் (சமைந்த எலாம்) சமையலாகித் தயாராய் (வைப்பதற்குச்) சித்தமாயிருப்பவை யாவற்றையும் (அழை) வர வழைப்பாயாக.
66. ஆமை அவியல் முயல் ஆணம் கண்டறியோம்
இது சிவசிவ மேலெங்கும் படை
(ஆமை அவியல்) ஆமை உணவை, முயலின் (ஆணம்) குழம்பைக் (கண்டறியோம்) இதுவரையும் கண்டதில்லை; சிவ சிவ! பேஷ்-பேஷ் - (மேல் எங்கும் படை) இனிமேல் இதை எவ்விடத்தும் (எமக்குப்) படைப்பாயாக - இடுவாயாக
67. இடைவெளி அற மிகு இடு கரு கலை இறவகை கயல் கெளிறு இவை பொடித்தன
(இடைவெளி) மத்தியில் ஒய்வு (அற) இல்லாமல் (எப்போதும் நிரம்ப என்றபடி) (மிகு இடு) அதிகமாக இடுவாயாக - பரிமாறுவாயாக (கரு) முட்டை, (கலை) சுறாமீன் (இறவகை) இறாவகை - இறால்மீன் வகை
(கயல்) கயல் மீன் வகை, (கெளிறு) கெளிற்று மீன்கள் - இவை, (பொடித்தன) பொடிசெய்து சமைக்கப்பட்டவையை
68. எட்டு வண்டி வாளையில் பீலியில்
இட்டமுண்டு தீயன் முற்பாடு அழை
எட்டு வண்டிகள் (நிறைய) (வாளையில்) வாளைமீன்களிலும், (பீலியில்) மயில்களிலும் (இட்டமுண்டு) எனக்கு இஷ்டமுண்டு - குழம்பைக் (கண்ட தீயனாகிய கொடியனாகிய எனது) (முற்பாடு) முன்னிலையில் (அழை) அழைப்பாயாக;
69. இடை கொழுப்பாடு இல் இளைய எலும்புடன் அடை சுரைக்காயில் அடு படை முன்கறி
(இடை) மத்தியிலே (கொழுப்பாடு இல்) இளைய எலும்புடன் உடல் கொழுப்படைதல் இல்லாது எலும்புடன் இளைத்துப்போனபடியால், (அடை) , இலையுடன் (சுரை) சுரைக்காயை (அடு) சமைத்துப் (படை) படைப்பாயாக வைப்பாயாக, (முன்கறி) முதலில் அந்தக் கறியை,
70. ஈறு புளி வார் விடாய் போம்படி
ஏடு பிரியாத பால் தேன் சொரி
(ஈறு) ஈற்றில் கடைசியில், (புளி) புளிங்கறியை (புளிச்சாறு இட்டுச் சமைத்தவையை) பச்சடி போன்றவையை (வார்) வார்ப்பாயாக - வைப்பாயாக; (விடாய் போம்படி) தாகம் தீரும்படி - (ஏடு பிரியாத) - ஏடு நீங்காத பாலையும், தேனையும் (சொரி) சொரிவாயாக.
71. இருக்கிற சருக்கரை வருக்கை கதலிக்கனி
ரசத்தினை அனைத்தையும் இலைக்குள் அடையப் படை இருக்கின்ற சர்க்கரை, (வருக்கை) பலாப்பழம், (கதலிக்கனி) வாழைப்பழம் இவைகளின் ரசம் எல்லா வற்றையும், இலையிலே (அடைய) நிரம்பப் (படை) படைப்பாயாக .
72. ஈக பாக்குடன் வெற்றிலை கர்ப்புரம் யாரும் ஏத்த இனிச் சுகம் உற்று இரு; (ஈக) தருக - பாக்குடனே வெற்றிலையையும், கர்ப்பூர தீபாராதனையையும்; (இங்ஙனம் எல்லாம் செய்து) (யாரும் ஏத்த) யாரும்
துதிக்கும்படி - புகழும்படி, (இனி சுகம் உற்று இரு) சுகத்துடனே வாழ்வாயாக. (எனது சித்துக்கள் இங்ஙனம் இருக்கட்டும், பேருண்மை ஒன்றைக் கூறுவேன் கேள்) :
முருகன் பெருமை .. சித்தர்களுள் ப்ரசித்தி பெற்றவர் முருகன் திருப்புகழைக் கற்றவரே
73. மிடை தரும் ப்ரவாள சடை பெரும் ப்ரவாக விமலர் கொன்றை மாலை தருண சந்த்ரரேகை
(மிடைதரும்) நெருக்கமுள்ளதும், (ப்ரவாளம்) பவளம் போலச் சிவந்ததுமான சடையில் (பெரும் ப்ரவாக) பெரு வெள்ளமான கங்கை (தங்கும்) (விமலர்) - பரிசுத்தமூர்த்தி, கொன்றை மாலையும், (தருண) இளமை வாய்ந்த சந்திரரேகை பிறைக்கீற்றும்
74. விரவு மணநாறு பாதார விந்த
விதரண விநோத(ம்) மாதாவின் மைந்தன்
(விரவு) கலந்து (மணம் நாறு) மணம் வீசும் (பாதார விந்த) (பாத அரவிந்தத்தை) திருவடித் தாமரைகளை உடையவளும், (விதரண விநோதம்) கொடையழகை - கருணை அழகைக் கொண்டவளும் ஆகிய (மாதாவின்) பார்வதி - தேவியின் (மைந்தன்) குமாரன்
75. மீன கேதனன் உருவின் மிகுந்து அருள்
தானவாரிதி சரவண சம்பவன்
(மீன கேதனன்) மீன் கொடியை உடைய மன்மதனுடைய (உருவின்) உருவ அழகிலும் (மிகுந்து) மிக்கவனாய் (அருள்) அருள்பாலிக்கின்ற, (தானவாரிதி) கொடையில் (வேண்டுவார் வேண்டியதைத் தருதலில்) கடலனையவன், (சரவண சம்பவன்) சரவண மடுவில் அவதரித்தவன்
76. விகிர்தி வேதனன் மவுன சுகாதனன் அகில காரணன் அகில கலாதரன்
(விகிர்தி) வேறுபாடுகளை (வேதனன்) அறிந்தவன்; (மவுன சுகாதனன்) சுக - ஆதனன் - மௌன நிலை என்னும் சுகநிலையில் (ஆசனம்) இடம் கொண்டவன்; (அகிலகாரணன்) சகலத்துக்கும் மூலகாரணனா
யிருப்பவன், ( அகில கலாதரன்) சகல கலைகளையும் கொண்டுள்ளவன் (அறிந்துள்ளவன்)
77. விகசித சுந்தர சந்தன பாளித(ம்) ம்ருகமத குங்கும(ம்) கச்ச(ம்) பயோதரி
(விகசித) மலர்ந்து விரிவுள்ளனவும், (சுந்தர) அழகு உள்ளனவும், (சந்தன) சந்தனம், (பாளிதம்) பச்சைக்கர்ப்பூரம், (ம்ருகமதம்) கஸ்தூரி, (குங்குமம்) இவைகளை அணிந்துள்ளனவும், (கச்சம்) தாமரை மொட்டு போன்றனவுமான பயோதரி - கொங்கைகளை உடையவளாய் -
78. வேழமும் உழைகளும் ஆரும் பைம்புனம் மேவுறு குறமகள் மேவும் திண்புயன்
(வேழமும்) யானைகளும், (உழைகளும்) மான்களும் (ஆரும்) நிறைந்துள்ள (பைம்புனம்) பசிய தினைப்புனத்தில் (மேவுறு) வீற்றிருந்த (குறமகள்) குறப்பெண் - வள்ளியை மேவும் - விரும்பி அணைந்த (திண்புயன்) திண்ணிய (வலிய) திருப்புயங்களை உடையவன்.
79. விரிகடல் துகள்எழ வெகுளும் விக்ரமன் அரிதிரு மருமகன் அறு முகத்தவன்
விரிந்த கடலும் (துகளெழ) வற்றித் தூள் பறக்க (வெகுளும்) கோபித்த (விக்ரமன்) பராக்ரமசாலி; (அரிதிரு மருமகன்) திருமாலின் அழகிய மருமகன் (அல்லது) கடலைக் கோபித்த ப்ராக்ரமனாம் திருமால், இலக்குமி இவர்கள் மருமகன், ஆறு திருமுகங்களை உடையவன்.
80. வெட்சி கொண்ட தோளன் வெற்பூடுற விட்ட வென்றி வேல் முழுச்சேவகன்
வெட்சி மாலையை அணிந்த புயங்களை உடையவன், (வெற்பு) கிரவுஞ்சகிரி (ஊடுற) ஊடுருவும்படி (விட்ட) செலுத்தின (வென்றி) வெற்றியை உடைய (வேல்) வேலாயுதத்தை ஏந்திய (முழுச் சேவகன்) அதி பராக்ரமசாலி.
81. வெருவு நக்கீரர் சரÿணன வந்தருள் முருகன் நிஷ்க்ரோத முநி குண பச்சரன் (வெருவு) பூதம் இட்ட குகையில் அஞ்சியிருந்த நக்கீரர் நீயே சரணம் என்று (பாடிப்) பரவ, அவரிடம் வந்து திருவருள் புரிந்த முருகவேள், (நிஷ்க்ரோத
முநி) குரோதம் கோபமே இல்லாத (முநி) - பெருமான், (குண பச்சரன்) நற்குணங்களுக்கு இடமானவன்,
82. மேதகு புராண வேத அங்குரன்
ஓதரிய மோன ஞானாங்குரன்
(மேதகு) மேன்மை வாய்ந்த புராணங்களுக்கும் வேதங்களுக்கும் (அங்குரன்) முளைபோன்றவன் (புராணங்களிலும் வேதத்திலும் வெளிப்படுபவன்) , ஒதுதற்கு அருமையான மௌன ஞானத்தில் (அங்குரன்) வெளிப்பட்டுத் தோன்றுபவன்,
83. மிகைத்தவர் புரத்ரயம் எரித்தவர் ப்ரியப்பட அகத்திய முநிக்கொரு தமிழ்த்ரயம் உரைத்தவன்
(மிகைத்தவர்) செருக்கு மிக்கிருந்தவர்களுடைய (புரத்ரயம்) புரங்கள் மூன்றையும் எரித்தவராம் சிவபிரான் ப்ரியப்படும்படி அகத்திய முனிவருக்கு ஒப்பற்ற இயல் - இசை - நாடகம் எனப்படும் முத்தமிழையும் போதித்தவன்,
84. வேத மூர்த்தி திருத்தணி வெற்புறை சோதி கார்த்திகை பெற்ற விளக்கொளி வேதத்திற் போற்றப்பட்ட மூர்த்தி, திருத்தணிகை மலையில் வீற்றிருந்த ºஜாதி மூர்த்தி, கார்த்திகை மாதர் பெற்ற விளக்கொளி போன்ற மூர்த்தி.
85. வெகுளி வென்ற வேள்வி முநிவர் சங்கம் ஏற விரவும் இந்த்ர லோக வழி திறந்த மீளி
(வெகுளி வென்ற) கோபத்தை வென்றவர்களும், (வேள்வி) யாகங்களைச் செய்பவர்களுமாகிய (முநிவர் சங்கம்) முநிவர்களின் கூட்டம், (ஏற) அச்சம் ஒழிந்து முன்னேறி விளங்க (விரவும்) பொருந்திய (இந்த்ரலோகம்) தேவேந்திரலோகம் - பொன்னுலகத்தில் (வழி திறந்த) குடியேறும்படி வழியைத் திறந்துவிட்ட - தடைகளை நீக்கிக் குடிபுக வழி தந்த (மீளி) சேனைத் தலைவன் - பெருமையிற் சிறந்தோன்
86. மிக விருது கூறு மேவார்கள் கண்டன் விகட(ம்) அசுரேசர் சா மோது சண்டன்
(மிக) நிரம்ப, (விருது) தங்கள் வெற்றிப் பெருமைகளை எடுத்துக் கூறும் (மேவார்கள்) பகைவர்களைக் (கண்டன்) கண்டித்த வீரன், (விகடம்)
தொந்தரை செய்த (அசுரேசர்) அசுரர் கூட்டத் தலைவர்கள் (சா) சாவும்படி (மோது) தாக்கின (சண்டன்) பெருங்கோபம் உடையவன்
87. மேக வாகன மிகுமத வெண்கய
பாகசாதனன் நகரி புரந்தவன்
மேகத்தை வாகனமாகக் கொண்டவனும், மிக்க மதத்தை உடைய வெண்ணிறத்த யானையாம் ஐராவதத்தை உடையவனுமான (பாகசாதனன்) இந்திரனுடைய (நகரி) நகரம் - அமராவதியைப் (புரந்தவன்) பாதுகாத்தவன்
88. விபுத தாரகன் விபுத திவாகரன் விபுத தேசிகன் விபுத சிகாமணி
(விபுத) தெய்வத்தன்மை வாய்ந்த (தாரகன்) பிரணவசொரூபன், (விபுத திவாகரன்) ஞான சூரியன், (விபுத தேசிகன்) ஞானகுரு (விபுதசிகாமணி) ஞானசிகாமணி
89. விபரித(ம்) கச்ச(ம்) விரிச்ச(ம்) பராமுகன் அபிநவ கந்தன் அடைந்தவர் தாபரன்
(விபரிதம்) மாறுபாடான உணர்ச்சிகொண்டவனும், (கச்சம்) தாமரையில் வீற்றிருப்பவனுமான (விரிச்சன்) பிரமனைப் (பராமுகன்) அலட்சியம் செய்தவன், (அபிநவ கந்தன்) என்றும் புதியனாம் கந்தசுவாமி, (அடைந்தவர்) தம்மைச் சரண் அடைந்தவர்களுக்குத் (தாபரன்) ஆதாரமாயுள்ளவன்
90. மேருவை இடிபட மோதும் சங்க்ரம தாரகன் மகுட(ம்) விபாடன் புங்கவன்
மேரு மலையை இடிபடும்படி (மோதும்) மோதும் செண்டால் அடித்த (புங்கவன்) (சங்க்ரம) சங்கிராமம், போர்க்கு வந்த தாரகாசுரனுடைய (மகுடம்) கிரீடத்தை (விபாடன்) பிளந்து தள்ளினவன்; அல்லது மேருவை . கிரவுஞ்சத்தை (இடிபட) பொடிபடும்படி (மோதும்) தாக்கின (சங்க்ரம) போர் வல்லவன்; தாரகன் மகுடத்தைப் பிளந்து தள்ளினவன்; (புங்கவன்) கடவுள்.
91. வெயில் உமிழ் கொடியொடு வினை முகத்தினில் மயில்மிசை வருமொரு வரதன் நிர்ப்பயன் வெயில் உமிழ் கொடி . சூரியனைக் கக்குகின்ற சேவற்கொடியுடன் (வினை முகத்தினில்) போர்க்களத்தில், மயில் மீது எழுந்தருளும் ஒப்பற்ற வரதன், (நிர்ப்பயன்) பயமில்லாதவன்.
92. வித்தகன் சுவாமி நிர்ப்பாவகன்
சத்தியன் ப்ரதாப வித்யாதரன்
(வித்தகன்) பேரறிவாளன்; சுவாமி, (நிர்ப்பாவகன்) உருவம் இல்லாதவன் அல்லது தியானத்துக்கு எட்டாதவன், (சத்தியன்) மெய்ப்பொருளானவன், (ப்ரதாப வித்யாதரன்) பேர்பெற்ற கலைஞன் - கலைச்செல்வன்
93. விரத நட்பாளர் பரியும் அசச்சலன் நிருத(ர்) நிட்டூரன் நிருதர் பயங்கரன்
(விரத நட்பாளர்) விரதங்களை அநுட்டிப்பதில் பிரியமுள்ளவர்கள், (பரியும்) காதல் கொள்ளும் (அசச்சலன்) சஞ்சலம் அற்றவன் - அசையாதவன், சலிப்பு (கவலை) அற்றவன், (நிருதர்) அசுரர்களிடம் (நிட்டூரன்) கொடுமை காட்டினவன்; (நிருதர் பயங்கரன்) அசுரர்களுக்கு அச்சம் (பயம்) தருபவன்
94. வீர மத லோக வேள் காங்கெயன்
சூர ரண சூர சூர் அந்தகன்
(வீரம்) மேன்மையான, (மதம்) (பக்திக் களிப்பை) மகிழ்ச்சியை உடைய (லோகம்) நன்மக்கள் - பெரியோர் போற்றும், (வேள்) முருகவேள், (காங்கெயன்) கங்கையில் தோன்றியவன், சூர ரண- அச்சம் தரும் (ரணம்) போரில் வரும், (சூர) சூரத்தனம் (வீரமுள்ள) (சூர்) சூரபத்மாவுக்கு (அந்தகன்) யமனாய் விளங்கினவன்
95. வினைப்பகை அறுப்பவன் நினைத்தது முடிப்பவன் மனத்துயர் கெடுத்து எனை வளர்த்து அருள் க்ருபைக்கடல் (வினை) வினை என்னும் பகையை (அறுப்பவன்) அழிப்பவனும், (நினைத்தது) அடியார்கள் நினைத்த எண்ணங்களை முடிப்பவன் - கூட்டி வைப்பவனும் நிறைவேற்றுபவனும், (மனத்துயர்) மனவேதனைகளைக் (கெடுத்து) தொலைத்து (எனை) என்னை (வளர்த்து அருள்) விருத்திக்குக் கொண்டுவந்து - உயர்நிலைக்குக் கொண்டுவந்து - திருவருள் பாலித்த கிருபைக் கடலானவனும் ஆன
96. வேலன் வாய்த்த திருப்புகழ் கற்றவர் சீலம் ஏத்திய சித்த ப்ரசித்தரே
(வேலன்) வேலாயுதக் கடவுளுக்கு (வாய்த்த) உள்ள - அடியேனால் பாடப்பட்டு அமைந்துள்ள (திருப்புகழை) திருப்புகழ்ப் பாடல்களைக்
(கற்றவர்) ஆய்ந்து படித்தவர்கள் (சீலம் ஏத்திய) சீலத்தால் (நல்லறிவால்) புகழ்பெற்ற அல்லது சீலம் உடையவர் புகழ்கின்ற - சித்த ப்ரசித்தரே சித்தர்களுள் (பிரசித்தம்) பேர்பெற்ற சித்தர்களாம், சகல சித்திகளும் கை வந்த பிரசித்தர்களாம் (புகழாளர்களாம்).
