Tamil Lyrics
அமரும் பதிகே ளகமா மெனுமிப்
பிமரங் கெடமெய்ப் பொருள் பேசியவா
குமரன்! கிரிராச குமாரி மகன்!
சமரம்பொரு தானவ நாசகனே!
Tamil Lyrics (Split)
அமரும் பதி, கேள், அகம்ஆம் எனும் இப்-
பிமரம் கெட, மெய்ப்பொருள் பேசியவா
குமரன்! கிரிராச குமாரி மகன்,
சமரம்பொரு தானவ நாசகனே!
Tamil Meaning
குமாரப்பெருமானே! அடியேன் விரும்பி வாழும் ஊர், [மனைவி மக்கள் முதலிய] உறவினர்கள், 'நான்' என்று சொல்லப்படுகின்ற ஆன்மா ஆகியவை பற்றிய அடியேனின் மயக்கம் கெடுமாறு உண்மைப் பொருளைப் போதித்தவரே! என்றென்றும் குமரனாகவும் (இமய) மலையரசனின் குமாரி (பார்வதிதேவியின்) மைந்தனாகவும் இருந்துகொண்டு, போர்க்களத்தில் போரிடும் (சூரபன்மன் முதலிய) அசுரர்களை அழித்த பெருமானே!
English Lyrics
amarum padhi kEL agam Am enum ip
pimaram keda meipporuL pEsiyavA
kumaran girirAsa kumAri magan
samaramporu thAnava nAsaganE!.
English Meaning
O, Lord Kumaraa! You are the eternally youthful Son of Goddess Paarvathi, daughter of the king of the (Himaalaya) mountain, You are the preceptor, who has expounded to me the Real Truth, so that I can get rid of my illusion about my village, relatives, and myself! You are the Lord, who annihilated the warring demons (including Soorapanman) in battle!
