Tamil Lyrics
மதிகெட் டறவா டிமயங் கியறக்
கதிகெட் டவமே கெடவோ கடவேன்?
நதிபுத் திர! ஞான சுகா திப!வத்
திதிபுத் திரர்வீ றடுசே வகனே!
Tamil Lyrics (Split)
மதி கெட்டு அற வாடி, மயங்கி, அறக்
கதி கெட்டு, அவமே கெடவோ கடவேன்?
நதிபுத்திர! ஞான சுகஅதிப! அத்
திதிபுத்திரர் வீறு அடு சேவகனே!
Tamil Meaning
கங்கை நதிக்கு மைந்தரே! ஞானசுகத்தின் தலைவரே! திதி என்பவளின் புத்திரர்களாகிய அசுரர்களின் பெருமையைக் கெடுத்து அழித்த அதிவீரரே! அறிவு குலைந்து மிகவும் உள்ளம் சோர்வுற்று மயங்கி நற்கதி பெறும்வழியை இழந்து வீணாகக் கெட்டழிதல் அடியேனின் தலைவிதியோ?
English Lyrics
madhi kettu aRa vAdi mayangki aRak
kadhi kettu avamE kedavO kadavEn?
nadhipuththira njAna suga adhiba ath
thidhipuththirar veeRu adu sEvaganE!
English Meaning
O, Lord! You are the Beloved Son of the river Ganges! You are the eternal abode of the bliss of divine wisdom! You are the Supreme Hero, who ruined and destroyed the pride of demons, who were the sons of a woman named Thithi! Am I destined to be bewildered, disillusioned, vainly ruined and destroyed bereft of the path of attaining mukthi [liberation]?
