Books
Arunagirichelvar

Kandhar Anubhudhi

Song 49 - thannam thani (தன்னம் தனி)

~ 1 min read

Tamil Lyrics

தன்னந் தனிநின் றது,தா னறிய
இன்னம் ஒருவர்க் கிசைவிப் பதுவோ?
மின்னுங் கதிர்வேல் விகிர்தா! நினைவார்
கின்னங் களையும், க்ருபைசூழ் சுடரே!

Tamil Lyrics (Split)

தன்னம் தனிநின்றது,தான் அறிய
இன்னம் ஒருவர்க்கு இசைவிப்பதுவோ?
மின்னும் கதிர்வேல் விகிர்தா! நினைவார்
கின்னம் களையும் க்ருபைசூழ் சுடரே!

Tamil Meaning

ஒளி வீசும் கதிர்களையுடைய வேலாயுத்தை ஏந்திய வேறுபாடுடைய திருமுருகப்பெருமானே! தேவரீரை நினைத்துத் தியானிப்பவர்களின் துக்கங்களை நீக்கும் கருணை விளங்கும் பேரொளியே! ஒரு சார்பும் இல்லாது தனித்து விளங்கும் பரம்பொருள் இத்தன்மைத்து என்று ,அறியுமாறு மற்றவருக்கு அடியேன் சொல்லவியலுமோ?

English Lyrics

thannam thani nindRadhuthAn aRiya
innam oruvarkku isaivippadhuvO
minnum kadhirvEl vigirthA ninaivAr
kinnam kaLaiyum krubaisUzh sudarE!

English Meaning

O. Lord Thirumurugapperumaan! You hold the lustrous lance, and You are indeed unique! You are the Great Effulgence of compassion, which removes the sorrows of those, who meditate upon You! Could it ever possible for me to tell others the nature of the unique Supreme Being, who remains without any other support whatsoever?

· WhatsApp
Books

Kandhar Anubhudhi

by Dr. Singaravelu Sachithanantham

96%
Reading Progress
Local First