சிவலோக வகுப்பு
முன்னுரை
மௌன யோக நிலையால் வரும் பேரின்ப அன்பெனப் படுஞ் சிவலோகந் தருவதான சிறப்புக்களை எடுத்துக் கூறிற்று.
சிவலோக வகுப்பு (மூலம்)
தனதன தனதன தனதன தனதன தந்தன
தந்தம் தாத்தன தந்தந் தனதானன
உரகமும் இதழியும் உதகமும் உடுபதி யும்புனை
யும்பஞ் சாட்சரர் பங்கின் கொடிதாளினில்
உலகமு மலைகளும் உததியும் உயிரும டங்கவொ
டுங்கும் பார்ப்பதி மைந்தன் கமலாலயன்
உபநிட முடிவினும் இடபம தனிலுமு யங்கிவ
யங்குஞ் சீர்ப்பதி யொன்றென் றவிதாஎன
உறைவிடு படையினன் அடலுடை நிசிசரர் தண்டமு
டைந்தங் கார்ப்பெழ வங்கம் பொருசேவகன்
வரபதி சுரபதி சரவண மடுவினில் வந்தருள்
கந்தன் கார்த்திகெ யன்செங் கழுநீர்மலர்
மழுவிய குருபரன் வனசரி பதயுக கஞ்சம்வ
ணங்கும் பாக்யக தம்பன் கருணாகரன்
வடதரு இலையிலும் வெகுமுக மவுலி அனந்தனெ
னுஞ்செஞ் சேக்கையி லுங்கண் துயில்மால்திரு
மருமகன் இமையவர் வழிபடு மணியணி கிங்கிணி
பண்கொண் டார்த்திசை கொஞ்சும் பதசூடிகை
அருவுரு ஒழியஓ ரபிநவ வடிவரு ளுந்தனி
யந்தந் தீக்ஷையெ னுங்குண் டலபூஷணம்
அணிமய மெனுமொரு சிவிகையொ டதிகுண மஞ்சினு
மஞ்சொன் றாக்கிய தென்பொங் கரியாசனம்
அறநெறி முறைமையில் ஒழுகிய அழகிய பண்பெனும்
அம்பொன் சேர்த்தக லிங்கஞ் சயசாரமும்
அவனவள் அதுஎன மொழியவும் இலதொரு வன்பிணி
யுங்கொண் டாக்கமும் இன்பங் களுமேதரும்
இரவலர் மிடிகெட உதவிய விதரண கங்கணம்
இங்கங் காப்பில் எனுஞ்சுந் தரகாகளம்
எனதறு துறவினும் உயர்கொடை யவிரத சங்குல
கெங்குங் கேட்டுவ ழங்கும் பொறைமாமுர
சிமையவர் கணமுனி கணமுடன் இனிதுப்ர பஞ்சம்
றைஞ்சுங் கீர்த்திது ரங்கந் திறல்வாரணம்
இருவினை கெடஒரு நிரமய பரமவு னந்தரும்
இன்பந் தேக்கிய அன்பின் சிவலோகமே.
சிவலோக வகுப்பு (பதம் பிரித்தது)
உரகமும் இதழியும் உதகமும் உடுபதியும் புனை-
யும் பச்சாட்சரர் பங்கின் கொடி தாளினில்
உலகமும் மலைகளும் உததியும் உயிரும் அடங்க
ஒடுங்கும் பார்ப்பதி மைந்தன் கமலாலயன்
உபநிட முடிவினும் இடபம் அதனிலும் முயங்கி
வயங்கும் சீர்ப்பதி ஒன்று என்று அவிதா என
உறைவிடு படையினன் அடல் உடை நிசிசரர் தண்டமும்
உடைந்து அங்கு ஆர்ப்பெழ அங்கம் பொருசேவகன்
வரபதி சுரபதி சரவண மடுவினில் வந்தருள்
கந்தன் கார்த்திகெயன் செங்கழுநீர்மலர்
மழுவிய குருபரன் வனசரி பத யுக கச்சம்
வணங்கும் பாக்ய கதம்பன் கருணாகரன்
வடதரு இலையிலும் வெகுமுக மவுலி அனந்தன்
எனும் செச் சேக்கையிலும்கண் துயில் மால் திரு
மருமகன் இமையவர் வழிபடு மணி அணி கிங்கிணி
பண் கொண்டு ஆர்த்து இசை கொச்சும் பத சூடிகை
அரு உரு ஒழிய ஓர் அபிநவ வடிவு அருளும் தனி
அந்தத் தீக்ஷை எனும் குண்டல பூஷணம்
அணிமயம் எனும் ஒரு சிவிகையொடு அதிகுண மச்சினும்
..... மச்சு ஒன்று ஆக்கிய தென்பொங்கு அரியாசனம்
அறநெறி முறைமையில் ஒழுகிய அழகிய பண்பெனும்
அம்பொன் சேர்த்த கலிங்கம் சயசாரமும்
அவன் அவள் அது என மொழியவும் இலது ஒரு வன்பிணி-
யும் கொண்டு ஆக்கமும் இன்பங்களுமே தரும்
இரவலர் மிடிகெட உதவிய விதரண கங்கணம்
இங்கு அம் காப்பில் எனும் சுந்தர காகளம்
எனதறு துறவினும் உயர் கொடை அவிரத சங்கு
உலகெங்கும் கேட்டு வழங்கும் பொறை மா முரசு
இமையவர் கண முனி கணமுடன் இனிது ப்ரபச்சம்
இறைச்சும் கீர்த்தி துரங்கம் திறல் வாரணம்
இருவினை கெட ஒரு நிரமய பரம மவுனம் தரும்
இன்பம் தேக்கிய அன்பின் சிவலோகமேடு
பதவுரை
பாம்பையும் கொன்றையும் கங்கா ¤லத்தையும் நட்சத்திர நாயகனான சந்திரனையும் தரித்துள்ளவரும்,.... ஐந்தெழுத்துக்கு உரியவரான சிவனாரின் இடது பாகத்தில் விளங்கும், கொடி போன்ற பார்வதியின் திருவடிகளில்,
உலகங்களும், மலைகளும், கடல்களும், சகல உயிர் வர்க்கங்களும்,.... முழுவதும் ஊழி காலத்தில் ஒடுங்கி நிற்கின்ற பார்வதி தேவியின் புதல்வன், (உதர கமலத்தினிடை முதிய புவனத்திரயமும் யுகமுடிவில் வைக்கும் உமையாள்), தாமரைப் படுக்கையில் வீற்றிருப்பவன்,
வேதங்களின் முடிந்த முடிவாகவும் ரிஷப வாகனத்தினும் பொருந்தி,.... விளங்கும் சிறந்த தலைவராகிய சிவபெருமான் மதித்து வணங்கும் ஒப்பற்ற பொருளே என்று அழைத்து, தேவர்களை அசுரர்களிடமிருந்து காப்பாற்று என்று கூற, (அவிதா.... காப்பாற்று) (விண்ºணார் தென் காவல் நம் முனைய வேல் பணி எனும் சேய் - அந்தாதி)
உறையிலிருந்து உருவப்பட்ட வேலை உடையவன் (வேலுக்கு உறை உண்டு : வேலை உறை நீட்டி வேலை தனில் ஓட்டு வேலை விளையாட்டு வயலூரா... ஆரம் முலை காட்டி (வயலூர் திருப்புகழ்)..... மிகுத்த பலம் கொண்ட அரக்கர்களின் சேனை சிதறிப் போக,.... அந்த யுத்த பூமியில் பேரொலி எழ போர் புரிந்த வீரன்,
வரங்களைக் கொடுப்பவன், தேவர்களின் தலைவன், சரவணப் பொய்கையில் உதித்த அருள் நிறைந்த கந்த ஸ்வாமி,.... கிருத்திகை மாதர்களின் மைந்தன்,
செங்கழுநீர் மலர் மாலை சூடிய குருமூர்த்தி (சருகிலாத செங்கழுநீர் புனையும் மார்பா),.... வள்ளி மலைக்காட்டில் வசித்த வள்ளியாரின் இரு திருவடிகளாகிய தாமரை மலர்களை வணங்கிய கதம்ப மாலை பூண்ட பாக்கிய மூர்த்தி,.... கருணை உருவானவன்,
ஆலிலையிலும், ஆயிரம் பணாமுடி உடைய ஆதிசேடனாகிய,.... சிறந்த படுக்கையிலும் (துத்தி தத்தி தா - அந்தாதி) துயில் கொள்ளும் திருமாலுக்கும் இலக்குமிக்கும் மருமகனாகிய கந்தப் பெருமானின்,
தேவர்கள் தொழும் ரத்தினங்கள் பதிக்கப் பட்ட சதங்கை,.... பல மணிகளுடன் சப்தித்து (கீத கிண்கிணி பாதா) ராக வகைக் காட்டும் திருவடியாகிய மணி முடியையும்,
நிகலம் சகடம் என்ற இரண்ட நெறிகளுக்கு அப்பாலதாய் (உருவம் இல்லாமை மற்றும் உருவமுடைமை எனும் இரண்டும் அற்றதாய்),.... ஒப்பற்ற அதிசயத்தக்க புதுமையான நிலையை தந்தருளும்,.... நிகரில்லாத முடிவான அழகான உபதேசமான காதணியாம் குண்டலத்தையும் (பேரின்பமாகிய சிவலோகத்தின் பயன் முருகப்பெருமான் நம் காதில் செய்யும் உபதேசம் நம் காதிற்கு குண்டலம் போலத் திகழும்).
அழகு மயம் என்று வியக்கத்தக்க ஒப்பற்ற ஒரு பல்லக்கையும்,.... அத்துடன் மிக மேன்மையானதும் அழகிற்கு அழகு மெருகு ஊட்டி,.... பொருந்துகின்ற அமைப்பை உடையது என்று சொல்லும்படி விளங்குகின்ற சிம்மாசனமும் (புவிரா¤ருக்கு பல்லக்கு சிம்மாசனம் போன்ற விருதுகள் கிடைப்பது போல தவரா¤ர்களுக்கு அத்துவித பேரின்பம், மனசமாதி முதலிய விருதுகள் கிடைக்கின்றன. கொங்கணகிரி திருப்புகழில் தனக்கு தண்டிகை கனப்பவுசு என கேட்பது இதுதான் போலும் - ஐங்கரனை யொத்த )
தரும நெறி ஒழுக்கத்தில் நிலவிய நற்குணத்திற்கு அடையாளச் சின்னமாக,.... அழகிய பொன் வேயப்பட்ட ஆடையையும்,.... வி¤ய ஸ்தம்பத்தையும்
அவன், அவள், அது என்று சுட்டறிவு காட்டுதற்கு இல்லாததான ஒரு வலிமை வாய்ந்த பிடிப்பையும், தரும்.... மேற்கொண்டு செல்வமும் சுகமும் தந்து உதவும்
யாசகர்களின் வறுமை அகல உதவி செய்யும் கொடைத் தன்மையையே விரதமாகப் பூண்டுள்ள நிலை,.... தங்கும் அழகிய பாதுகாவலுக்கு இதுவே என ஓதும் அழகிய எக்காளத்தையும்
மமகாரம் அற்றுப் போன வைராக்கிய நிலையிலும் உயர்ந்த கொடையாகிய எப்போதும் முழங்கும் சங்கினையும்,
உலகின் எவ்விடத்திலும் பேசப்படும் பொறுமையாகிய சிறந்த பறை வாத்தியத்தையும்
தேவர் கூட்டம் ரிஷி கூட்டத்துடன் களிப்புடன் உலக மக்கள் போற்றி வணங்கும் புகழ் என்ற குதிரையையும்,.... பராக்கிரமம் ஆகிய யானையையும்
(அரசர்களுக்குரிய தசாங்கம் போல கொடை எனும் எக்காளத்தையும், சங்கையும், பொறையாகிய பேரிகையையும், கீர்த்தி எனும் குதிரையையும், வீரமாகிய யானையையும், மௌன ஞான நிலையையும் உறுப்பு அன்பின் சிவலோகம் தரும், அதாவது பெரு நிலையையும் பெரும் புகழையும் தரும் என்றபடி,)
நல்வினை தீவினை இரண்டும் ஒழித்து ஒப்பற்றதும் நோய்கள் அற்றதுமான மேலான.... ஞான நிலையைத் தரும், பேரின்ப வெள்ளம் பாயும் அன்பாகிய சிவ லோகமே.
இவ்வகுப்பு அன்பின் சிறப்பை எடுத்துக் கூறுகிறது.
பதம் பிரித்து சொல் விளக்கம்
1. உரகமும் இதழியும் உதகமும் உடுபதியும் புனையும் .... பாம்பையும் கொன்றையும் கங்கா ¤லத்தையும் நட்சத்திர நாயகனான சந்திரனையும் தரித்துள்ளவரும், பச்சாட்சரர் பங்கின் கொடி தாளினில் .... ஐந்தெழுத்துக்கு உரியவரான சிவனாரின் இடது பாகத்தில் விளங்கும், கொடி போன்ற பார்வதியின் திருவடிகளில்,
2. உலகமும் மலைகளும் உததியும் உயிரும் .... உலகங்களும், மலைகளும், கடல்களும், சகல உயிர் வர்க்கங்களும், அடங்க ஒடுங்கும் பார்ப்பதி மைந்தன் கமலாலயன் .... முழுவதும் ஊழி காலத்தில் ஒடுங்கி நிற்கின்ற பார்வதி தேவியின் புதல்வன், (உதர கமலத்தினிடை முதிய புவனத்திரயமும் யுகமுடிவில் வைக்கும் உமையாள்), தாமரைப் படுக்கையில் வீற்றிருப்பவன்,
3. உபநிட முடிவினும் இடபம் அதனிலும் முயங்கி .... வேதங்களின் முடிந்த முடிவாகவும் ரிஷப வாகனத்தினும் பொருந்தி, வயங்கும் சீர்ப்பதி ஒன்று என்று அவிதா என .... விளங்கும் சிறந்த தலைவராகிய சிவபெருமான் மதித்து வணங்கும் ஒப்பற்ற பொருளே என்று அழைத்து, தேவர்களை அசுரர்களிடமிருந்து காப்பாற்று என்று கூற, (அவிதா .... காப்பாற்று) (விண்ºணார் தென் காவல் நம் முனைய வேல் பணி எனும் சேய் - அந்தாதி)
4. உறை விடு படையினன் .... உறையிலிருந்து உருவப்பட்ட வேலை உடையவன் (வேலுக்கு உறை உண்டு : வேலை உறை நீட்டி வேலை தனில் ஓட்டு வேலை விளையாட்டு வயலூரா ... ஆரம் முலை காட்டி (வயலூர் திருப்புகழ்). அடலுடை நிசிசரர் தண்டமும் உடைந்து .... மிகுத்த பலம் கொண்ட அரக்கர்களின் சேனை சிதறிப் போக, அங்கு ஆர்ப்பெழ அங்கம் பொரு சேவகன் .... அந்த யுத்த பூமியில் பேரொலி எழ போர் புரிந்த வீரன்,
5. வரபதி சுரபதி சரவண மடுவினில் வந்தருள் கந்தன் .... வரங்களைக் கொடுப்பவன், தேவர்களின் தலைவன், சரவணப் பொய்கையில் உதித்த அருள் நிறைந்த கந்த ஸ்வாமி, கார்த்திகேயன் .... கிருத்திகை மாதர்களின் மைந்தன்,
6. செங்கழுநீர் மலர் மழுவிய குருபரன் .... செங்கழுநீர் மலர் மாலை சூடிய குருமூர்த்தி (சருகிலாத செங்கழுநீர் புனையும் மார்பா), வனசரி பத யுக கச்சம் வணங்கும் பாக்ய கதம்பன் .... வள்ளி மலைக்காட்டில் வசித்த வள்ளியாரின் இரு திருவடிகளாகிய தாமரை மலர்களை வணங்கிய கதம்ப மாலை பூண்ட பாக்கிய மூர்த்தி, கருணாகரன் .... கருணை உருவானவன்,
7. வட தரு இலையிலும் வெகுமுக மவுலி அனந்தன் எனும் .... ஆலிலையிலும், ஆயிரம் பணாமுடி உடைய ஆதிசேடனாகிய, செச் சேக்கையிலும் கண் துயில் மால் திரு மருமகன் .... சிறந்த படுக்கையிலும் (துத்தி தத்தி தா - அந்தாதி) துயில் கொள்ளும் திருமாலுக்கும் இலக்குமிக்கும் மருமகனாகிய கந்தப் பெருமானின்,
8. இமையவர் வழிபடு மணி அணி கிங்கிணி .... தேவர்கள் தொழும் ரத்தினங்கள் பதிக்கப் பட்ட சதங்கை, பண் கொண்டு ஆர்த்து இசை கொச்சும் பத சூடிகை .... பல மணிகளுடன் சப்தித்து (கீத கிண்கிணி பாதா) ராக வகைக் காட்டும் திருவடியாகிய மணி முடியையும்,
9. அருவுரு ஒழிய .... நிகலம் சகடம் என்ற இரண்ட நெறிகளுக்கு அப்பாலதாய் (உருவம் இல்லாமை மற்றும் உருவமுடைமை எனும் இரண்டும் அற்றதாய்), ஓர் அபிநவ வடிவு அருளும் .... ஒப்பற்ற அதிசயத்தக்க புதுமையான நிலையை தந்தருளும், தனி அந்தந் தீக்ஷை எனும் குண்டல பூஷணம் .... நிகரில்லாத முடிவான அழகான உபதேசமான காதணியாம் குண்டலத்தையும் (பேரின்பமாகிய சிவலோகத்தின் பயன் முருகப்பெருமான் நம் காதில் செய்யும் உபதேசம் நம் காதிற்கு குண்டலம் போலத் திகழும்).
10. அணிமயம் எனும் ஒரு சிவிகையொடு .... அழகு மயம் என்று சு வியக்கத்தக்க ஒப்பற்ற ஒரு பல்லக்கையும், அதிகுண மச்சினும் மச் .... அத்துடன் மிக மேன்மையானதும் அழகிற்கு அழகு மெருகு ஊட்டி, ஒன்று ஆக்கிய தென்பொங்கு அரியாசனம் .... பொருந்துகின்ற அமைப்பை உடையது என்று சொல்லும்படி விளங்குகின்ற சிம்மாசனமும் (புவிரா¤ருக்கு பல்லக்கு சிம்மாசனம் போன்ற விருதுகள் கிடைப்பது போல தவரா¤ர்களுக்கு அத்துவித பேரின்பம், மனசமாதி முதலிய விருதுகள் கிடைக்கின்றன. கொங்கணகிரி திருப்புகழில் தனக்கு தண்டிகை கனப்பவுசு என கேட்பது இதுதான் போலும் - ஐங்கரனை யொத்த )
11. அறநெறி முறைமையில் ஒழுகிய அழகிய பண்பெனும் .... தரும நெறி ஒழுக்கத்தில் நிலவிய நற்குணத்திற்கு அடையாளச் சின்னமாக, அம்பொன் சேர்த்த கலிங்கம் .... அழகிய பொன் வேயப்பட்ட ஆடையையும், சயசாரமும் .... வி¤ய ஸ்தம்பத்தையும்
12. அவன் அவள் அது என மொழியவும் இலது ஒரு வன்பிணியும் .... அவன், அவள், அது என்று சுட்டறிவு காட்டுதற்கு இல்லாததான ஒரு வலிமை வாய்ந்த பிடிப்பையும், கொண்டு ஆக்கமும் இன்பங்களுமே தரும் .... மேற்கொண்டு செல்வமும் சுகமும் தந்து உதவும்
13. இரவலர் மிடி கெட உதவிய விதரண கங்கணம் .... யாசகர்களின் வறுமை அகல உதவி செய்யும் கொடைத் தன்மையையே விரதமாகப் பூண்டுள்ள நிலை, இங்கு அம் காப்பில் எனும் சுந்தர காகளம் .... தங்கும் அழகிய பாதுகாவலுக்கு இதுவே என ஓதும் அழகிய எக்காளத்தையும்
14. எனது அறு துறவினும் உயர் கொடை அவிரத சங்கு .... மமகாரம் அற்றுப் போன வைராக்கிய நிலையிலும் உயர்ந்த கொடையாகிய எப்போதும் முழங்கும் சங்கினையும், உலகெங்கும் கேட்டு வழங்கும்
பொறை மா முரசு .... உலகின் எவ்விடத்திலும் பேசப்படும் பொறுமையாகிய சிறந்த பறை வாத்தியத்தையும்
15. இமையவர் கணம் முனி கணமுடன் இனிது ப்ரபச்சம் இறைச்சும் கீர்த்தி துரங்கம் .... தேவர் கூட்டம் ரிஷி கூட்டத்துடன் களிப்புடன் உலக மக்கள் போற்றி வணங்கும் புகழ் என்ற குதிரையையும், திறல் வாரணம் .... பராக்கிரமம் ஆகிய யானையையும்
(அரசர்களுக்குரிய தசாங்கம் போல கொடை எனும் எக்காளத்தையும், சங்கையும், பொறையாகிய பேரிகையையும், கீர்த்தி எனும் குதிரையையும், வீரமாகிய யானையையும், மௌன ஞான நிலையையும் உறுப்பு அன்பின் சிவலோகம் தரும், அதாவது பெரு நிலையையும் பெரும் புகழையும் தரும் என்றபடி,)
16. இருவினை கெட ஒரு நிரமய பரம மவுனம் தரும் ... நல்வினை தீவினை இரண்டும் ஒழித்து ஒப்பற்றதும் நோய்கள் அற்றதுமான மேலான .... ஞான நிலையைத் தரும், இன்பம் தேக்கிய அன்பின் சிவலோகமே பேரின்ப வெள்ளம் பாயும் அன்பாகிய சிவ லோகமே.
இவ்வகுப்பு அன்பின் சிறப்பை எடுத்துக் கூறுகிறது.
