மயில் வகுப்பு
முன்னுரை
மயிலின் ஆற்றலைக் கூறுவது.
மயில் வகுப்பு (மூலம்)
தானதன தந்ததன தானதன தந்ததன
தானதன தந்ததன தந்த தனனா
ஆதவனும் அம்புலியும் மாசுறவி ழுங்கியுமிழ்
ஆலமரு வும்பணியி ரண்டும் அழுதே
ஆறுமுகன் ஐந்துமுகன் ஆனைமுகன் எங்கடவு
ளாமெனமொ ழிந்தகல வென்று விடுமே
ஆர்கலிக டைந்தமுது வானவர்அ ருந்தஅருள்
ஆதிபக வன்துயில்அ நந்தன் மணிசேர்
ஆயிரம் இருந்தலைக ளாய்விரிப ணங்குருதி
யாகமுழு துங்குலைய வந்த றையுமே
வேதமுழு தும்புகல் இராமன் ஒரு தம்பிமிசை
வீடணன் அருந்தமையன் மைந்தன் இகலாய்
வீசும்அர வஞ்சிதறி யோடவரு வெங்கலுழன்
மேல்இடி எனும்படிமு ழங்கி விழுமே
மேதினிசு மந்தபெரு மாசுணம யங்கநக
மேவுசர ணங்கொடுல கெங்கு முழுமெ
வேலியென எண்டிசையில் வாழும்உர கந்தளர
வேஅழலெ னுஞ்சினமு டன்ப டருமே
போதினில் இருந்தகலை மாதினைம ணந்தவுயர்
போதனை யிரந்துமலர் கொண்டு முறையே
பூசனைபு ரிந்துகொடி யாகிமகிழ் ஒன்றுதுகிர்
போல்முடிவி ளங்கவரும் அஞ்சம் அடுமே
பூதரொடு கந்தருவர் நாதரொடு கிம்புருடர்
பூரணக ணங்களொடு வந்து தொழவே
போரிடுவ வென்றுவெகு வாரணக ணங்களுயிர்
போயினம் எனும்படிஎ திர்ந்து விழுமே
கோதகலும் ஐந்துமலர் வாளிமத னன்பொருவில்
கோலவுட லங்கருகி வெந்து விழவே
கோபமொடு கண்டவிழி நாதர் அணி யும்பணிகள்
கூடிமனம் அஞ்சிவளை சென்று புகவே
கூவியிர வந்தம்உணர் வாழியென நின்றுபொரு
கோழியொடு வென்றிமுறை யும்ப கருமே
கோலமுறு செந்தில்நகர் மேவுகும ரன்சரண
கோகனதம் அன்பொடுவ ணங்கு மயிலே
மயில் வகுப்பு (பதம் பிரித்தது)
ஆதவனும் அம்புலியும் மாசுற விழுங்கி உமிழ்
ஆலம் மருவும் பணி இரண்டும் அழுதே
ஆறுமுகன் ஐந்துமுகன் ஆனைமுகன் எம் கடவுள்
ஆம் என மொழிந்து அகல வென்று விடுமேடு
ஆர்கலி கடைந்து அமுது வானவர் அருந்த அருள்
ஆதிபகவன் துயில் அநந்தன் மணி சேர்
ஆயிரம் இரும் தலைகளாய் விரி பணங்குருதி
ஆக முழுதும் குலைய வந்து அறையுமேடு
வேத முழுதும் புகல் இராமன் ஒரு தம்பி மிசை
வீடணன் அரும் தமையன்டுமைந்தன் இகலாய்
வீசும் அரவம் சிதறி ஓட வரு வெம் கலுழன்டு
மேல் இடி எனும்படிடுமுழங்கி விழுமேடு
மேதினி சுமந்த பெரு மாசுணம் மயங்க நக
மேவு சரணம் கொஉலகெங்கும் உழுமே
வேலி என எண் திசையில் வாழும் உரகம்டுதளரவே
அழல் எனும்டுசினமுடன் படருமேடு
போதினில் இருந்த கலை மாதினை மணந்த உயர்
போதனை இரந்து மலர்டுகொண்டு முறையே
பூசனை புரிந்து கொடியாகி மகிழ் ஒன்று துகிர்
போல் முடி விளங்க வரும்டுஅச்சம் அடுமே
பூதரொடு கந்தருவர் நாதரொடு கிம்புருடர்
பூரண கணங்களொவந்து தொழவே
போரிடுவ வென்று வெகு வாரண கணங்கள் உயிர்
போயினம் எனும்படிடுஎதிர்ந்து விழுமே
கோதகலும் ஐந்து மலர் வாளி மதனன் பொருவில்
கோல உடலம் கருகிடுவெந்து விழவே
கோபமொடு கண்ட விழி நாதர் அணியும்டுபணிகள்
கூடி மனம் அச்சி வளைடுசென்று புகவேடு
கூவி இரவு அந்தம் உணர் வாழி என நின்று பொரு
கோழியொடு வென்றிடுமுறையும் பகருமே
கோலம் உறு செந்தில் நகர் மேவு குமரன்
சரண கோகனதம் அன்பொவணங்கு மயிலே
பதவுரை
வெயில் பரப்பும் சூரியனும் தண்மை வரிக்கும் சந்திரனும் களங்கம் அடைய வாயில் இட்டு மீண்டும் கக்கும் குணம் அடைய,... விடம் பொருந்திய இராகு கேது எனும் இரு பாம்பு உருவ கோள்களும் அலறி அழுது,
ஆறுமுகப் பரமன், ஐம்முகச் சிவன், யானை முகக் கணபதி எமது வழிபடு... தெய்வங்கள், நிச்சயமாகச் சொல்கிறோம் என்று கூறி வழி விலகி ஓட முனைப்பு அகல வென்று அவர்கட்கு உயிர்ப்பிச்சை தரும்.
நிறைந்த பாற்கடலைக் கடைந்து அமரர் அமுது உண்ண உதவிய,... திருமால் துயில் கொள்ளும் படுக்கையான ஆதிஷேடனின் மாணிக்கங்கள் உடைய
வன்மை உள்ள 1000 தலைகளில் இருந்து மலரும் 1000 படங்களும் குருதி குளம்பு மயமாக,... அப்பாம்பின் உடல் முழுதும் நெறிய வந்து மோதும்.
எல்லா வேதங்களும் துதிக்க இராமபிரானின் ஒப்பற்ற தம்பியாகிய இலட்சுமணன் மேல்,... அருமையான விபீடணனின் தமையனாகிய இராவணனது மகனாகிய இந்திரஜித்து பகை மிகுந்து
விட்ட நாக கணை சிதறுண்டு ஓடி ஒழிய உவந்து வந்த உக்ரமான கருடன் மேல்,... இடி என்று சொல்லும்படி பெரும் முழுக்கம் செய்து மேல் வந்து மோதும்
உலகைத் தாங்கிய பெரிய பாம்பான ஆதிசேடனுடைய அறிவு நிலை குலைய,... நகங்களை உடைய பாதங்களைக் கொண்டு உலகம் முழுவதையும் கிளறி உழுதலைச் செய்யும்.
8.... உலகிற்கு இட்ட வேலி போல் எண் திசையிலும் வாழ்கின்ற எட்டு நாகங்களும் உடலும் உள்ளமும் பெரும் தளர்ச்சி அடையும்படி,... மூங்கிலில் எழும் காட்டுத் தீ எனும்படியான கோபக் கொதிப்புடன் பவனி வரும்.
9.... வெண் கமலத்தில் வீற்றிருந்த கலை மகளை மணந்து கொண்ட,... உயர்ந்த புத்தியுள்ள பிரமனைக் குறை இரந்து (சொல்லி),
மலர் பறித்து விதிப்படி அர்ச்சித்து வழிபட்டு அதன் பயனாக அப்பிரமனுக்குக் கொடியாக விளங்கி, மகிழ்ச்சி பொருந்தும்,... பவளம் போல் உச்சிக் கொண்டை விளங்க வெளி வருகின்ற அன்னத்தைத் தண்டிக்கும்.
11.... பூத கணங்களுடன் கந்தர்வர்கள் நவநாத சித்தர்கள் கிம்புருடர்கள்,... பதிÿணன் கணங்களுடன் வந்து வணங்க
அவர்களிடம் அமர் செய்து தடை விளைப்பம் என்று கருதி அளவிலா யானைகள்... உயிர்ப்பு ஒழிந்தோம் என பிளிறும்படி அவைகளை எதிர்த்து மோதும்.
குற்றம் அகன்ற ஐந்து மலர்களை உடைய மன்மதனது நிகரற்ற,... அழகிய உடல் வெந்து தீய்ந்து போகும் வண்ணம்,
உக்ர நோக்கம் செய்த அருள் நாத வடிவினரான சிவனார் அணிந்துள்ள ஆபரணங்கள் ஆகிய பாம்புகள்,... ஒருங்கு சேர்ந்து உள்ளம் பயந்து வளையில் ஓடி ஒளியும்படி,
கொக்கரக்கோ எனும் பெரும் குரல் எழுப்பி கூவி இரவின் முடிவை உணர்த்தி உயிர்கள் அதனால் வாழ்க எனக் கூறி நிமிர்ந்து நின்று,... அறியாமையை மோதும் சேவலுடன் தனது வெற்றி முறைகளை விரிவாக எடுத்துச் சொல்லும்.
அழகிய திருச்செந்தூரில் விரும்பி எழுந்தருளிய குமரக் கடவுளுடைய,... திருவடித் தாமரைகளை அன்புடன் வணங்கும் மயிலே.
மயிலேறும் குமரன் மலரடிக்கே அடைக்கலம்.
பதம் பிரித்து சொல் விளக்கம்
1. ஆதவனும் அம்புலியும் மாசுற விழுங்கி உமிழ் ... வெயில் பரப்பும் சூரியனும் தண்மை வரிக்கும் சந்திரனும் களங்கம் அடைய வாயில் இட்டு மீண்டும் கக்கும் குணம் அடைய, ஆலம் மருவும் பணி இரண்டும் அழுதே ... விடம் பொருந்திய இராகு கேது எனும் இரு பாம்பு உருவ கோள்களும் அலறி அழுது,
2. ஆறுமுகன் ஐந்துமுகன் ஆனைமுகன் எம் கடவுள் ... ஆறுமுகப் பரமன், ஐம்முகச் சிவன், யானை முகக் கணபதி எமது வழிபடு ... தெய்வங்கள், ஆம் என மொழிந்து அகல வென்று விடுமே நிச்சயமாகச் சொல்கிறோம் என்று கூறி வழி விலகி ஓட முனைப்பு அகல வென்று அவர்கட்கு உயிர்ப்பிச்சை தரும்.
3. ஆர்கலி கடைந்து அமுது வானவர் அருந்த அருள் ... நிறைந்த பாற்கடலைக் கடைந்து அமரர் அமுது உண்ண உதவிய, ஆதி பகவன் துயில் அநந்தன் மணி சேர் ... திருமால் துயில் கொள்ளும் படுக்கையான ஆதிஷேடனின் மாணிக்கங்கள் உடைய
4. ஆயிரம் இரும் தலைகளாய் விரி பணங்குருதி ஆக ... வன்மை உள்ள 1000 தலைகளில் இருந்து மலரும் 1000 படங்களும் குருதி குளம்பு மயமாக, முழுதும் குலைய வந்து அறையுமே ... அப்பாம்பின் உடல் முழுதும் நெறிய வந்து மோதும்.
5. வேதம் முழுதும் புகல் இராமன் ஒரு தம்பி மிசை ... எல்லா வேதங்களும் துதிக்க இராமபிரானின் ஒப்பற்ற தம்பியாகிய இலட்சுமணன் மேல், வீடணன் அரும் தமையன் மைந்தன் இகலாய் ... அருமையான விபீடணனின் தமையனாகிய இராவணனது மகனாகிய இந்திரஜித்து பகை மிகுந்து
6. வீசும் அரவம் சிதறி ஓட வரு வெம் கலுழன் மேல் ... விட்ட நாக கணை சிதறுண்டு ஓடி ஒழிய உவந்து வந்த உக்ரமான கருடன் மேல், இடி எனும்படி முழங்கி விழுமே ... இடி என்று சொல்லும்படி பெரும் முழுக்கம் செய்து மேல் வந்து மோதும்
7. மேதினி சுமந்த பெரு மாசுணம் மயங்க ... உலகைத் தாங்கிய பெரிய பாம்பான ஆதிசேடனுடைய அறிவு நிலை குலைய, நக மேவு சரணம் கொடு உலகெங்கும் உழுமே ... நகங்களை உடைய பாதங்களைக் கொண்டு உலகம் முழுவதையும் கிளறி உழுதலைச் செய்யும்.
வேலி என எண் திசையில் வாழும் உரகம் தளர ... உலகிற்கு இட்ட வேலி போல் எண் திசையிலும் வாழ்கின்ற எட்டு நாகங்களும் உடலும் உள்ளமும் பெரும் தளர்ச்சி அடையும்படி, வே அழல் எனும் சினமுடன் படருமே ... மூங்கிலில் எழும் காட்டுத் தீ எனும்படியான கோபக் கொதிப்புடன் பவனி வரும்.
போதினில் இருந்த கலை மாதினை மணந்த ... வெண் கமலத்தில் வீற்றிருந்த கலை மகளை மணந்து கொண்ட, உயர் போதனை இரந்து ... உயர்ந்த புத்தியுள்ள பிரமனைக் குறை இரந்து (சொல்லி), மலர் கொண்டு முறையே
10. பூசனை புரிந்து கொடியாகி மகிழ் ஒன்றும் ... மலர் பறித்து விதிப்படி அர்ச்சித்து வழிபட்டு அதன் பயனாக அப்பிரமனுக்குக் கொடியாக விளங்கி, மகிழ்ச்சி பொருந்தும், துகிர் போல் முடி விளங்க வரும் அச்சம் அடுமே ... பவளம் போல் உச்சிக் கொண்டை விளங்க வெளி வருகின்ற அன்னத்தைத் தண்டிக்கும்.
- பூதரொடு கந்தருவர் நாதரொடு கிம்புருடர் ... பூத கணங்களுடன் கந்தர்வர்கள் நவநாத சித்தர்கள் கிம்புருடர்கள், பூரண கணங்களொடு வந்து தொழவே ... பதிÿணன் கணங்களுடன் வந்து வணங்க
12. போரிடுவ வென்று வெகு வாரண கணங்கள் ... அவர்களிடம் அமர் செய்து தடை விளைப்பம் என்று கருதி அளவிலா யானைகள் , உயிர்போயினம் எனும்படி எதிர்ந்து விழுமே ... உயிர்ப்பு ஒழிந்தோம் என பிளிறும்படி அவைகளை எதிர்த்து மோதும்.
13. கோதகலும் ஐந்துமலர் வாளி மதனன்பொருவில் ... குற்றம் அகன்ற ஐந்து மலர்களை உடைய மன்மதனது நிகரற்ற, கோல உடலம் கருகி வெந்து விழவே ... அழகிய உடல் வெந்து தீய்ந்து போகும் வண்ணம்,
14. கோபமொடு கண்டவிழி நாதர் அணியும் பணிகள் ... உக்ர நோக்கம் செய்த அருள் நாத வடிவினரான சிவனார் அணிந்துள்ள ஆபரணங்கள் ஆகிய பாம்புகள், கூடி மனம் அச்சி வளை சென்று புகவே ... ஒருங்கு சேர்ந்து உள்ளம் பயந்து வளையில் ஓடி ஒளியும்படி,
15. கூவி இரவு அந்தம் உணர் வாழி என நின்று ... கொக்கரக்கோ எனும் பெரும் குரல் எழுப்பி கூவி இரவின் முடிவை உணர்த்தி உயிர்கள் அதனால் வாழ்க எனக் கூறி நிமிர்ந்து நின்று, பொரு கோழியொடு வென்றி முறையும் பகருமே ... அறியாமையை மோதும் சேவலுடன் தனது வெற்றி முறைகளை விரிவாக எடுத்துச் சொல்லும்.
16. கோலமுறு செந்தில் நகர் மேவு குமரன் ... அழகிய திருச்செந்தூரில் விரும்பி எழுந்தருளிய குமரக் கடவுளுடைய, சரண கோகனதம் அன்பொடு வணங்கு மயிலே ... திருவடித் தாமரைகளை அன்புடன் வணங்கும் மயிலே.
மயிலேறும் குமரன் மலரடிக்கே அடைக்கலம்.
