Books
Arunagirichelvar

முருகன் பாமாலை

thiruchentil vakuppu

~ 5 min read

திருச்செந்தில் வகுப்பு

திருச்செந்தில் வகுப்பு (மூலம்)

தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த
தந்த தந்த தந்த தந்த தனதானனா

சந்த பந்த முந்து விந்தை செஞ்சொ லின்ப்ர பந்த நந்து
சங்க மங்க லம்பொ ருந்து தமிழ்பாடியே

தஞ்ச மென்று சென்று சென்று நஞ்சு விஞ்சு நெஞ்ச வஞ்சர்
தங்கண் முன்பு நின்று நின்று மெலிவோ தியே

சிந்தை நொந்து நொந்து நைந்து நைந்து வெம்பி வெம்பி யங்கி
சிந்தி யிந்த வெங்கு டம்பை அழிபோதுமா

சிங்க முன்பு குந்த தந்தி யின்கு லங்க லங்கு பண்பொ
சிந்த துன்ப மென்றொ ழிந்து கரையேறுவேன்

அந்த ரங்கள் அண்டர் அண்டம் மண்ட லங்கு லுங்க நின்ற
சைந்த சைந்து பந்தெ ழும்ப அசுராதியோர்

அங்க டங்கள் துண்ட துண்ட கண்ட பந்தி கண்டை வந்த
லைந்து ருண்டு மண்டை சிந்த அடர்கோபனே

கந்த சந்த நுங்கு கும்ப கொங்கை யிந்தி ரன்ம டந்தை
கங்க ணம்பு ரந்த வென்றி அணிநேயனே

கம்பு மஞ்ச முந்தி கழ்ந்தி ருந்தி டுந்தி றஞ்செ றிந்து
கஞ்ச நன்ற லர்ந்த செந்தின் முருகேசனே.

திருச்செந்தில் வகுப்பு (பதம் பிரித்தது)

சந்த பந்த(ம்) முந்து விந்தை செஞ்சொலின் ப்ரபந்த(ம்) நந்து
சங்க மங்கலம் பொருந்து தமிழ் பாடியே

தஞ்சம் என்று சென்று சென்று நஞ்சு விஞ்சு நெஞ்ச வஞ்சர் தங்கள்
முன்பு நின்று நின்று மெலிவு ஓதியே

சிந்தை நொந்து நொந்து நைந்து நைந்து வெம்பி வெம்பி அங்கி
சிந்தி இந்த வெம் குடம்பை அழி போது மா

சிங்க(ம்) முன் புகுந்த தந்தியின் குலம் கலங்கு பண்பு
ஒசிந்த துன்பம் என்று ஒழிந்து கரை ஏறுவேன்

அந்தரங்கள் அண்டர் அண்டம் மண்டலம் குலுங்க நின்று
அசைந்து அசைந்து பந்து எழும்ப அசுராதியோர்

அம் கடங்கள் துண்ட துண்ட(ம்) கண்ட பந்தி சண்டை
வந்து அலைந்து உருண்டு மண்டை சிந்த அடர் கோபனே

கந்த சந்த(ம்) நுங்கு கும்ப(ம்) கொங்கை இந்திரன் மடந்தை
கங்கணம் புரந்த வென்றி அணி நேயனே

கம்பும் அஞ்சமும் திகழ்ந்து இருந்திடும் திறம் செறிந்து
கஞ்ச நன்று அலர்ந்த செந்தின் முருகேசனே

பதவுரை

  • சந்தங்களின் திரட்சி (அல்லது) சந்த அழகு -, முற்பட்டு விளங்கும் அற்புதம் வாய்ந்த செஞ்சொற்களால் ஆகிய பாமாலையாய் வளர்ச்சியுற்று, சங்க நூல் போன்ற மங்களகரமான மதிப்புப் பொருந்தியதான தமிழைப் பாடி

(நீயே) தஞ்சமென்று புகலாவாய் - அடைக்கல ஸ்தானம் ஆவாய் என்று கூறிச் அடிக்கடி போய் விஷம் மிக்க நெஞ்சத்தை உடைய வஞ்சகர்கள் முன்னிலையிற் போய் அடிக்கடி வெகு நேரம் நின்று (காத்து நின்று) என்னுடைய (வறுமை) வருத்தங்களை எடுத்துச் சொல்லி,

உள்ளம் மிக வருந்தி, மிகத்தளர்ந்து, மிக வாடி கனல் மூச்சு - நெருப்பு வீசும் (கவலை மூச்சுக்களை) விட்டு, இந்த கொடிய கூடாகிய உடல் அழிகின்றபோது (உடலை விட்டு உயிர் போகும் பொழுது), பெரிய

சிங்கத்தின் முன் புகுந்து அகப்பட்ட யானைக் கூட்டம் கலக்கமுறுகின்ற தன்மையில் வருத்தம் தரும் துன்பமானது எப்போது நீங்கி (நான்) கரையேறுவேன்.

தேவ லோகங்கள் (அல்லது வெளியிடங்கள்), பகிரண்டங்களாம் ப்ரதேசங்கள் குலுங்க நின்று, அடிக்கடி அசைவுற்று பந்து எழுவது போல மேலே எழும்பவும், அசுரர் முதலானோருடைய.

நல்ல உடல்கள் துண்டம் துண்டமாகக் கண்ட - துண்டு பட்டழியக் கண்ட பந்தி - சூரசம்மாரம் எனக் கீர்த்தி பெற்ற, போரில் அலைந்து உருண்டு - அலைபட்டு உருண்டு மண்டை உடைந்து (சிந்தும்படி) சிதறும்படி அவர்களை எதிர்த்துத் தாக்கின் கோபம் கொண்டவனே!

சந்தம் - நறுமணமுள்ள சந்தனத்தை (அல்லது) கந்தனே! சந்தம் - சந்தனத்தை - அணிந்துள்ள குடம் போன்ற கொங்கைகளை உடைய இந்திரனுக்கு உரிய மாது - சசிதேவியின், - மங்கலக் காப்பைக் காத்த, அல்லது இந்திரன் குமாரியான தேவசேனைக்கு மங்கலக் காப்பு வளையல்களை அநுக்கிரகித்த - தேவசேனையை மணந்த - வெற்றி புனையும் நேசனே - நண்பனே!

சங்குகளும், அன்னமும் விளங்கி நிற்கும் தன்மை மிகுந்துள்ள தாமரை நன்கு மலர்ந்து திகழும் திருச்செந்தூர் முருகேசனே! --------------------------------------------------------------------

பதம் பிரித்து சொல் விளக்கம்

1. சந்த பந்த(ம்) முந்து விந்தை செச்சொலின் ப்ரபந்த(ம்) நந்து சங்க மங்கலம் பொருந்து தமிழ் பாடியே

(சந்த பந்தம்) - சந்தங்களின் திரட்சி (அல்லது) சந்த அழகு - (முந்து) , முற்பட்டு விளங்கும் (விந்தை) அற்புதம் வாய்ந்த செஞ்சொற்களால் ஆகிய (பிரபந்தம் ) பாமாலையாய் (நந்து) வளர்ச்சியுற்று , (சங்க மங்கலம் ) சங்க நூல் போன்ற மங்களகரமான மதிப்புப் பொருந்தியதான தமிழைப் பாடி

2. தச்சம் என்று சென்று சென்று நச்சு விச்சு நெச்ச வச்சர் தங்கள் முன்பு நின்று நின்று மெலிவு ஓதியே

(நீயே) தஞ்சமென்று புகலாவாய் - அடைக்கல ஸ்தானம் ஆவாய் என்று கூறிச் (சென்று சென்று) அடிக்கடி போய் (நச்சு விச்சு) விஷம் மிக்க நெஞ்சத்தை உடைய (வச்சர் தங்கள் முன்பு) வஞ்சகர்கள் முன்னிலையிற் போய் (நின்று நின்று) அடிக்கடி வெகு நேரம் நின்று (காத்து நின்று) (மெலிவு ஓதியே) என்னுடைய (வறுமை) வருத்தங்களை எடுத்துச் சொல்லி,

3. சிந்தை நொந்து நொந்து நைந்து நைந்து வெம்பி வெம்பி அங்கி சிந்தி இந்த வெம் குடம்பை அழி போது மா

(சிந்தை) உள்ளம் (நொந்து நொந்து) மிக வருந்தி, (நைந்துநைந்து) மிகத்தளர்ந்து, (வெம்பி வெம்பி) மிக வாடி (அங்கி சிந்தி) கனல் மூச்சு - நெருப்பு வீசும் (கவலை மூச்சுக்களை) விட்டு, இந்த (வெம்) கொடிய (குடம்பை) கூடாகிய உடல் (அழிபோது) அழிகின்றபோது (உடலை விட்டு உயிர் போகும் பொழுது), (மா) பெரிய

4. சிங்க(ம்) முன் புகுந்த தந்தியின் குலம் கலங்கு பண்பு ஒசிந்த துன்பம் என்று ஒழிந்து கரை ஏறுவேன்

சிங்கத்தின் முன் புகுந்து அகப்பட்ட (தந்தியின் குலம்) யானைக் கூட்டம் (கலங்கு பண்பு) கலக்கமுறுகின்ற தன்மையில் (ஒசிந்த துன்பம்) வருத்தம் தரும் துன்பமானது (என்று) எப்போது (ஒழிந்து) நீங்கி (நான்) கரையேறுவேன்.

5. அந்தரங்கள் அண்டர் அண்டம் மண்டலம் குலுங்க நின்று அசைந்து அசைந்து பந்து எழும்ப அசுராதியோர்

(அந்தரங்கள்) தேவ லோகங்கள் (அல்லது வெளியிடங்கள்), (அண்டரண்ட மண்டலம்) பகிரண்டங்களாம் ப்ரதேசங்கள் (குலுங்க நின்று ) குலுங்க நின்று, (அசைந்து அசைந்து) அடிக்கடி அசைவுற்று (பந்து எழும்ப) பந்து எழுவது போல மேலே எழும்பவும், அசுரர் முதலானோருடைய .

6. அம் கடங்கள் துண்ட துண்ட(ம்) கண்ட பந்தி சண்டை வந்து அலைந்து உருண்டு மண்டை சிந்த அடர் கோபனே

(அம் கடங்கள்) நல்ல உடல்கள் (துண்ட துண்ட கண்ட) துண்டம் துண்டமாகக் கண்ட - துண்டு பட்டழியக் கண்ட பந்தி - சூரசம்மாரம் எனக் கீர்த்தி பெற்ற, (சண்டை) போரில் (வந்து) அலைந்து உருண்டு - அலைபட்டு உருண்டு மண்டை உடைந்து (சிந்தும்படி) சிதறும்படி அவர்களை (அடர்) எதிர்த்துத் தாக்கின் கோபம் கொண்டவனே!

7. கந்த சந்த(ம்) நுங்கு கும்ப(ம்) கொங்கை இந்திரன் மடந்தை கங்கணம் புரந்த வென்றி அணி நேயனே

(கந்த சந்தம்) சந்தம் - நறுமணமுள்ள சந்தனத்தை (அல்லது) கந்தனே! சந்தம் - சந்தனத்தை - (நுங்கு) அணிந்துள்ள (கும்பம்) குடம் போன்ற கொங்கைகளை உடைய (இந்திரன் மடந்தை) இந்திரனுக்கு உரிய மாது - சசிதேவியின், (கங்கணம் புரந்த) - மங்கலக் காப்பைக் காத்த, அல்லது இந்திரன் குமாரியான தேவசேனைக்கு (கங்கணம்) மங்கலக் காப்பு வளையல்களை (புரந்த) அநுக்கிரகித்த - தேவசேனையை மணந்த (வென்றி அணி) - வெற்றி புனையும் (நேயனே) நேசனே - நண்பனே!

8. கம்பும் அச்சமும் திகழ்ந்து இருந்திடும் திறம் செறிந்து கச்ச நன்று அலர்ந்த செந்தின் முருகேசனே.

(கம்பும்) சங்குகளும் (அச்சமும்) , அன்னமும் ( திகழ்ந்து இருந்திடும்) விளங்கி நிற்கும் (திறம்) தன்மை (செறிந்து) மிகுந்துள்ள (கச்சம்) தாமரை (நன்று அலர்ந்த) நன்கு மலர்ந்து திகழும் திருச்செந்தூர் முருகேசனே! --------------------------------------------------------------------

· WhatsApp
Books

முருகன் பாமாலை

by Dubai Nagarathar Sangam

89%
Reading Progress
Local First