Tamil Lyrics
வானோ, புனல்,பார், கனல்,மாருதமோ?
ஞானோ தயமோ? நவில்நான் மறையோ?
யானோ? மனமோ? எனையாண் டவிடந்
தானோ? பொருளா வது சண் முகனே!
Tamil Lyrics (Split)
வானோ, புனல்,பார், கனல், மாருதமோ
ஞானோதயமோ? நவில் நான்மறையோ?
யானோ? மனமோ? எனையாண்ட இடம்
தானோ? பொருளாவது சண்முகனே?
Tamil Meaning
ஆறுமுகக் கடவுளே! 'பரம்பொருள்' என்பது யாது? ஆகாயமோ? நீரோ? பூமியோ? நெருப்போ? காற்றோ? ஞானத்தினால் அறியக்கூடிய பொருளோ? ஓதப்படுகின்ற நான்கு வேதங்களோ? 'நான்' என்று சொல்லப்படுகின்ற சீவனோ? மனமோ? ['நீயேநான்-நானேநீ' என்று கூறி] அடியேனை ஆட்கொண்ட தேவரீரோ?
English Lyrics
vAnO punalpAr kanal mArudhamO
njAnOdhayamO navil nAnmaRaiyO
yAnO manamO enaiyANda idam
thAnO poruLAvadhu saNmuganE?.
English Meaning
O, God Sanmukaa! What is the Supreme Being like? Is it the sky, the water, the earth, the fire, or the air? Is it perceivable by one's wisdom? Is it the four Vedas, which are being recited? Is it the soul that is referred to as 'I' ? Is it the mind? Is it Your Supreme Self, who graciously accepted me as Your devotee [by saying, 'Yourself is myself', and 'myself is Yourself']?
