Books
Arunagirichelvar

Thiruchenthur Kanthar Kalivenpa

Chapter 3: Guru of All Faiths and the Sacred Form of Compassion (verses 18–33)

~ 3 min read

Tamil Lyrics

  1. தொன்னூல் பரசமயம் தோறும் அதுஅதுவே
    நன்னூல் எனத் தெரிந்து நாட்டுவித்து - முன்னூல்

  2. விரதம் முதலாய பல மெய்த்தவத்தின் உண்மைச்
    சரியைகிரி யாயோகம் சார்வித்து - அருள்பெருகு

  3. சாலோக சாமீப சாரூபமும் புசிப்பித்து
    ஆலோகம் தன்னை அகற்றுவித்து - நால்வகையாம்

  4. சத்தி நிபாதம் தருதற்கு இருவினையும்
    ஒத்துவரும் காலம் உளவாகிப் - பெத்த

  5. மலபரிபாகம் வரும்அளவில் பன்னாள்
    அலமருதல் கண்ணுற்றுஅருளி - உலவாது

  6. அறிவுக்கு அறிவாகி அவ்வறிவுக்கு எட்டா
    நெறியில் செறிந்தநிலை நீங்கிப் - பிரியாக்

  7. கருணைத் திருஉருவாய்க் காசினிக்கே தோன்றிக்
    குருபரன்என் றோர்திருப்பேர் கொண்டு - திருநோக்கால்

  8. ஊழ் வினையைப் போக்கி உடல்அறுபத் தெட்டுநிலம்
    ஏழும்அத்து வாக்கள்இருமூன்றும் - பாழாக

  9. ஆணவ மானபடலம் கிழித்து அறிவில்
    காணரிய மெய்ஞானக்கண் காட்டிப் - பூணும்

  10. அடிஞானத் தால்பொருளும் ஆன்மாவும் காட்டிக்
    கடியார் புவனம்முற்றும் காட்டி - முடியாது

  11. தேக்குபர மானந்தத் தெள்ளமுத மாகிளங்கும்
    நீக்கமற நின்ற நிலைகாட்டிப் - போக்கும்

  12. வரவும் நினைப்பும் மறப்பும் பகலும்
    இரவும் கடந்துஉலவா இன்பம் - மருவுவித்துக்

  13. கன்மமலத் தார்க்குமலர்க் கண்மூன்றும் தாழ்சடையும்
    வன்மழுவும் மானுமுடன் மால்விடைமேல் - மின்னிடத்துப்

  14. பூத்தபவளப் பொருப்புஒன்று வெள்ளி வெற்பில்
    வாய்த்தனைய தெய்வ வடிவாகி - மூத்த

  15. கரும மலக் கட்டறுத்துக் கண்ணருள்செய்து உள்நின்று
    ஒருமலத்தார்க்கு இன்பம் உதவிப் - பெருகிழு

  16. மூன்றுஅவத்தை யும்கழற்றி முத்தருடனே இருத்தி
    ஆன்ற பரமுத்தி அடைவித்துத் - தோன்றவரும்

English Meaning

"You make the followers of various other religious faiths realize that their respective ancient religious treatises are the true ones and learn them deeply; and then

you make them observe the fasts and āśramas [married-life, asceticism], which are prescribed in the ancient treatises in order to attain through the observances of cariyai, kiriyai, and yōgam your sacred grace by means of the spiritual experience of mukthis of the cālokam, cāmīpam, and cārūpam, thereby removing ignorance and enlarging further their lucid knowledge;

when the time comes for the beings to regard both the good and evil deeds similarly for the purpose of conferring your four kinds of grace, you assume the sacred form of Kuruparan on earth, look upon the suffering of the beings when they are born, die, and reborn over a long period of time, with the eyes of compassion, remove the results of previous deeds, tear off the fog of ignorant egoism, confer the grace of wisdom, enable the souls to know the Supreme Being, the self and the world, make known the imperishable Eternal Being of Bliss, cause the souls to experience the un-diminishing bliss, transcending the going, coming, forgetfulness, memory, day and night, assume the sacred form with three eyes, matted hair, and sacred hands bearing the axe and deer while being seated on the bull with the goddess Umāthēvi on the left, like a coral-hill being on a silver mountain, sever the bondage of the impurity of deed and bestowing bliss, remove the three-fold suffering of kēvalam, cakalam, and cuththam, make them dwell with those who have attained mukthi, and bestow upon them wholesome mukthi [salvation] …"

· WhatsApp
Books

Thiruchenthur Kanthar Kalivenpa

by Dr. Singaravelu Sachithanantham

25%
Reading Progress
Local First