Tamil Lyrics
பூங்கயிலை வெற்பில் புனைமலர்ப்பூங் கோதையிடப்
பாங்குறையும் முக்கண் பரஞ்சோதி - ஆங்கொருநாள்வெந்தகுவர்க்கு ஆற்றாத விண்ணோர் முறைக்கிரங்கி
ஐந்துமுகத்தொடு அதோமுகமும் - தந்துதிருமுகங்கள் ஆறாகிச் செந்தழற்கண் ஆறும்
ஒருமுகமாய்த் தீப்பொறி ஆறுஉய்ப்ப - விரிபுவனம்எங்கும் பரக்க இமையோர்கண்டு அஞ்சுதலும்
பொங்கும் தழற்பிழம்பைப் பொற்கரத்தால் - அங்கண்எடுத்தமைத்து வாயுவைக் கொண்டுஏகுதியென்று எம்மான்
கொடுத்தளிப்ப மெல்லக் கொடுபோய் - அடுத்ததொருபூத் தலைவ! கொடுபோதியெனத் தீக்கடவுள்
சீதப் பகீரதிக்கே சென்றுஉய்ப்பப் - போதொருசற்றுஅன்னவளும் கொண்டமைதற்கு ஆற்றாள் சரவணத்தில்
சென்னியில் கொண்டுஉய்ப்பத் திருஉருவாய் - முன்னர்அறுமீன் முலையுண்டு அழுது விளையாடி
நறுநீர் முடிக்கணிந்த நாதன் - குறுமுறுவல்கன்னியொடும் சென்று அவட்குகாதலுருக் காட்டுதலும்
அன்னவள்கண்டு அவ்உருவம் ஆறினையும் - தன்னிரண்டுகையால் எடுத்தணைத்துக் கந்தன்எனப் பேர்புனைந்து
மெய்யாறும் ஒன்றாக மேவுவித்துச் - செய்யமுகத்தில் அணைத்து உச்சிமோந்து முலைப்பால்
அகத்துள் மகிழ்பூத் தளித்துச் - சகத்தளந்தவெள்ளை விடைமேல் விமலன் கரத்தில் அளித்து
உள்ளம் உவப்ப உயர்ந்தோனே! - கிள்ளைமொழி
English Meaning
"Lord Civaperumān in the form of an immensely lustrous light and with three eyes, abides on the dazzling and beautiful mountain of Kailāyam, and the Lord has the goddess Umāthēvi as part of his left side.
One day, in response to the fervent appeal made by the divine beings, who could no longer bear the suffering caused by the ruthless demons, the sympathetic Lord's five sacred faces, [Īcāna, caththiyōcatha, Vāmathēva looking northwards, akōra looing southwards, Thaṭpuruṭa looking eastwards] together with the athō-face looking downwards, released six sparks of fire from the fiery eyes of the six foreheads.
As the sparks expanded and spread all over the universe, and the divine beings became alarmed, the Lord graciously took the sparks in the palm of his golden hand and, after having pacified the fiery sparks, commanded the deity of wind to take them along;
the deity of wind then asked the deity of fire to carry the sparks for a while;
the deity of fire carried the sparks for some distance, but being unable to bear the heat, dropped them on the river Kaŋkai [Ganges];
the holy river also could not bear the heat of the sparks even for a short while, and quickly conveyed them to the pool of Caravaṇa thickets. The six sparks became transformed as six infants, and they were suckled by the six maidens of kārththikai [Pleiades]-asterisms, who served as the infant Lord's six foster-mothers.
As the infants were crying and playing, Lord Civaperumān came to the pool with the goddess Umāthēvi and showed the infants to her.
Thereupon, the goddess embraced all the infants together with her arms, and the six infants became one child, whom she named Kaṅthan.
The goddess fondly hugged the child to her face, smelt the crown of the child's head, and suckled the child; then she handed the child over to the sacred hands of Lord Civaperumān, who was seated on the white bull [who is, indeed, Lord Thirumāl, who traversed the world]. The infant Lord Kaṅthan abided with his happy parents …"
