Books
Arunagirichelvar

Thiruchenthur Kanthar Kalivenpa

Chapter 7: The Universal Form and the Ten Royal Insignia (verses 57–74)

~ 3 min read

Tamil Lyrics

  1. இளம்பருதி நூறா யிரம்கோடி போல
    வளந்தரு தெய்வீக வடிவும் - உளந்தனிற்கண்டு

  2. ஆதரிப்போர்க்கு ஆருயிராய் அன்பர்அகத் தாமரையின்
    மீதிருக்கும் தெய்வ விளக்கொளியே! - ஓதிய ஐந்து

  3. ஓங்காரத்துள் ஒளிக்கும் உள்ளொளியாய் ஐந்தொழிற்கும்
    நீங்காத பேருருவாய் நின்றோனே! - தாங்கரிய

  4. மந்திரமே சோரியா வான்பதமே மாமுடியாத்
    தொந்தமுறும் வண்ணமே தொக்காகப் - பந்தனையால்

  5. ஒத்த புவனத்து உருவே உரோமமாத்
    தத்துவங்களே சத்த தாதுவா - வைத்த

  6. கலையே அவயவமாக் காட்டும் அத்துவாவின்
    நிலையே வடிவமா நின்றோய்! - பலகோடி

  7. அண்டம் உருவாகி அங்கம் சராசரமாய்க்
    கண்டசத்தி மூன்றும் கரணமாய்த் - தொண்டுபடும்

  8. ஆவிப் புலனுக்கு அறிவுஅளிப்ப ஐந்தொழிலும்
    ஏவித் தனிநடத்தும் எங்கோவே! - மேவ

  9. வரும்அட்ட மூர்த்தமாம் வாழ்வே! மெய்ஞ்ஞானம்
    தரும்அட்ட யோகத் தவமே! - பருவத்து

  10. அகலாத பேரன்பு அடைந்தோர் அகத்துள்
    புகலாகும் இன்பப் பொருப்பும் - சுகலளிதப்

  11. பேரின்ப வெள்ளப் பெருக்காறும் மீதானம்
    தேரின்பம் நல்கும் திருநாடும் - பாரின்பம்

  12. எல்லாம் கடந்த இருநிலத்துள் போக்குவரவு
    அல்லா துயர்ந்த அணிநகரும் - தொல்உலகில்

  13. ஈறும் முதலும் அகன்று நிறைந்துஐந் தெழுத்தைக்
    கூறிநடாத்தும் குரகதமும் - ஏறுமதம்

  14. தோய்ந்து களித்தோர் துதிக்கையினால் பஞ்சமலம்
    காய்ந்த சிவஞானக் கடாக்களிறும் - வாய்ந்தசிவ

  15. பூரணத்துள் பூரணமாம் போதம் புதுமலரா
    நாரகத்துள் கட்டும் நறுந்தொடையும் - காரணத்துள்

  16. ஐந்தொழிலும் ஓவாது அளித்துயர்ந்த வான்கொடியும்
    வந்த நவநாத மணிமுரசும் - சந்ததமும்

  17. நீக்கமின்றி ஆடிநிழல்அசைப்பான்போல் புவனம்
    ஆக்கி அசைத்தருளும் ஆணையும் - தேக்கமழ்ந்து

  18. வீசும் பனுவல் விபுதர் தனித்தனியே
    பேசும் தசாங்கம்எனப் பெற்றோனே! - தேசுதிகழ்

English Meaning

"Your sacred divine body is of such great brightness as the light of millions of young sun-discs;

your devotees perceive the sacred form in their inner mind's eye, and you are the bright lustrous divine lamp abiding in their innermost lotus-flower-like-heart.

You are the innermost light of ōmkāra, and you are the eternal form for the fivefold tasks [of creation, maintenance, concealment, bestowal of grace and dissolution].

The eminent mantras are the blood; the best words are the hair of the head; the related alphabets are the skin; the forms of the worlds are the hair of the body; the philosophies are the seven kinds of elements, five kinds of arts are the parts of the body, and your sacred form thus consists of the above six aspects.

You have the millions of the universes as your form, and the movable and the immovable things in them are the parts of your body; and

you have the three powers consisting of the knowledge, desire, and task as internal organs;

you make everything known to your devotees, who serve ceaselessly by means of mind, language and body; and

you are the Supreme Being, who carries out the five-fold tasks by your command through others.

You have the eight kinds of forms as your sacred body, and you are the source of life, granting grace to all beings.

You are the object of penance, capable of attaining the great wisdom to understand the true being by means of eight kinds of yogas.

You have the following ten royal insignia:

The mountain of bliss, which has the heart of the devotee, who is inseparable from you;

the happy and beautiful river flooded with bliss;

the beautiful country, capable of giving all the happiness;

the city of mukthi [salvation] with no birth or death;

the horse, driven by the utterance of the five sacred letters;

the rutting elephant of Civañāna, which removes five kinds of impurities,

the fragrant garland of complete Supreme Being;

the flag of the power, which executes the five-fold activity;

the kettle-drum of nāda-philosophy, and

the sacred sovereign rule of grace, like that of one, who moves the reflection in the mirror without oneself moving …"

· WhatsApp
Books

Thiruchenthur Kanthar Kalivenpa

by Dr. Singaravelu Sachithanantham

58%
Reading Progress
Local First