Tamil Lyrics
வேரிக் கடம்பும் விரைக்குரவும் பூத்தலர்ந்த
பாரப் புயசயிலம் பன்னிரண்டும் - ஆரமுதம்தேவர்க்கு உதவும் திருக்கரமும் சூர்மகளிர்
மேவக் குழைந்தணைந்த மென்கரமும் - ஓவாதுமாரி பொழிந்த மலர்க்கரமும் பூந்தொடையல்
சேரஅணிந்த திருக்கரமும் - மார்பகத்தில்வைத்த கரதலமும் வாமமருங் கிற்கரமும்
உய்த்த குரங்கில் ஒருகரமும் - மொய்த்தசிறிதுடிசேர் கையும்மணி சேர்ந்ததடங் கையும்
கறுவுசமர் அங்குசஞ்சேர் கையும் - தெறுபோர்அதிர்கேட கம்சுழற்றும் அங்கைத் தலமும்
கதிர்வாள் விதிர்க்கும் கரமும் - முதிராதகும்ப முலைச்செவ்வாய்க் கொடியிடையார் வேட்டணைந்த
அம்பொன் மணிப்பூண் அகன்மார்பும் - பைம்பொன்புரிநூலும் கண்டிகையும் பூம்பட்டுடையும்
அரைஞாணும் கச்சை அழகும் - திருவரையும்நாதக் கழலும் நகுமணிப்பொற் கிண்கிணியும்
பாதத்து அணிந்த பரிபுரமும் - சோதி
English Meaning
"Your twelve sacred shoulders, that are strong enough to bear anything, are adorned with garlands, strung with clusters of honey-trickling kaṭampu and kurā blossoms;
you have twelve sacred hands:
one of them helps the celestials by giving them the ambrosia;
another soft hand graciously receives the divine damsels;
another hand extends help for the falling of uninterrupted showers of rain from the sky;
another sacred hand is adorned with garlands of flowers;
another sacred hand is abiding on the sacred chest for granting grace;
one sacred hand is at the left side of the waist;
one sacred hand bears the small [hour-glass-shaped] uṭukkai-drum, full of sound;
one sacred hand is holding the bell for chiming the sound;
one sacred hand is holding the goad for angrily waging war against evil;
one beautiful sacred hand is whirling the shield in the war for destroying the enemy; and
one sacred hand is whirling the lustrous sword.
Your broad chest is adorned with beautiful ornaments of gold and ruby, three-stringed-necklace made of fine gold, and garland of uruththirakkam-beads [eloecarpus ganitrus], and your chest is lovingly embraced by your consorts Vaḷḷi-ammai and Theyvayānai-ammai, who have young pot-like-breasts, crimson lips, and creeper-like waists;
your elegant sacred hip is adorned with lovely silk apparel, waist-string, and waist-sash;
Your sacred feet are adorned with tinkling heroic anklets and strings of golden bells, embedded with precious gems …"
